ப்ளூ சட்டை மாறனை சும்மா விடமாட்டாரு போல பார்த்திபன்.. ரசிகர்கள் திட்டும் வீடியோவையே போட்டுட்டாரு!

சென்னை: இரவின் நிழல் படம் வெளியாகி பாராட்டுக்களை அள்ளும் என்று எதிர்பார்த்தால், ஏகப்பட்ட சர்ச்சைகளை தான் கிளப்பி வருகிறது.

இரவின் நிழல் நாயகி பிரிகிடா சர்ச்சையாக பேசி பிரச்சனையில் சிக்கினார். அவருக்கு ஆதரவு கொடுக்கும் விதமாக ட்வீட் போட்டு பார்த்திபனும் அதே சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

அது ஒரு பக்கம் இருக்க அந்த படம் உலகின் நான் லீனியர் சிங்கிள் ஷாட் இல்லை என தொடர்ந்து கூறி வரும் ப்ளூ சட்டை மாறனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே பெரிய மோதல் வலுத்து வருகிறது.

5 டிக்கெட் வாங்கினால்

5 டிக்கெட் வாங்கினால்

இரவின் நிழல் படம் கடந்த வாரம் வெளியான நிலையில், தியேட்டரில் மக்கள் கூட்டம் பெரிதாக இல்லை. இந்த வார இறுதியிலாவது மீண்டும் படத்தை ஓட்ட புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளார். 5 டிக்கெட் வாங்கி, 5 பேருடன் படத்தை பார்த்து, ட்வீட் போட்டால், ஊருக்கு 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, சென்னையில் ஒரு நாள் இரவு பார்த்திபன் உடன் விருந்து உண்ணலாம் என்கிற அறிவிப்பையும் தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.

பாராட்டுக்களை காணோம்

பாராட்டுக்களை காணோம்

படம் வெளியாவதற்கு முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து பாராட்டிய வீடியோவை வைத்தே புரமோஷன் செய்தனர். ஆனால், படம் வெளியான பிறகு ரசிகர்களை தவிர எந்த பிரபலங்களும் பெரிதாக இரவின் நிழல் படத்தை பாராட்டவில்லை. மேலும், படத்தை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வலம் வருவதால், கொண்டாட்டத்திற்கு பதிலாக பஞ்சாயத்துக்கள் தான் எழுந்துள்ளன.

வலுத்த சண்டை

வலுத்த சண்டை

இரவின் நிழல் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என தொடர்ந்து நடிகர் பார்த்திபன் ஆணித்தரமாக சொல்லி வருகிறார். அது இல்லை என வெரைட்டி உள்ளிட்ட சினிமா இதழ்களை காட்டி ஃபிஷ் அண்ட் கேட் படம் தான் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் என ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து வரும் நிலையில், செருப்பு மாலை, ரசிகர்கள் திட்டு என இருவருக்கும் இடையே பெரிய மோதல் வலுத்துள்ளது.

பார்த்திபன் போட்ட வீடியோ

இதில், அடுத்த கட்டமாக ப்ளூ சட்டை மாறனுக்கு ரசிகர்கள் பதிலடி என தற்போது தியேட்டரில் படம் பார்த்து விட்டு வெளியே வரும் ரசிகர்கள் பேசும் வீடியோ ஒன்றை பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்திலேயே ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில், ப்ளூ சட்டை மாறனை ரசிகர்கள் கண்டபடி திட்டி விளாசித் தள்ளி உள்ளனர். இதற்கும் அவர் என்ன ட்வீட் போடப் போகிறார் என ரசிகர்கள் இருவரது ட்விட்டர் ஐடிக்களையும் மாற்றி மாற்றி பார்த்து வருகின்றனர்.

சூரியனுக்கு அவசியமில்லை

சூரியனுக்கு அவசியமில்லை

"கொலைக்குற நாய்க்கு பதில் சொல்லிட்டு இருக்கணும்னு சூரியன்கு அவசியம் இல்ல சார்.. உங்களோட அடுத்த படத்துக்கு நேரத்த செலவு பண்ணுங்க." என்றும் ப்ளூ சட்டை மாறனை கண்டுக்காம விட்டு விடுங்க பார்த்திபன் என்றும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அட்வைஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

3வது பொண்டாட்டி

3வது பொண்டாட்டி

"எப்பா எப்பா என்ன திட்டுனாலும் பரவாயில்ல.. என் 3வது பொண்டாட்டி என்ன பாவம் பண்ணுச்சி தோண்டி எடுத்து அடிக்குறாங்கப்பா.. இனி உன் படத்துக்கு ரிவ்யூ சொன்னா செருப்பால அடி" என ப்ளூ சட்டை மாறன் பார்த்திபனிடம் சொல்வது போல ப்ளூ சட்டை அணிந்த வடிவேலுவின் மீமை போட்டு திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X