»   »  திரையுலகில் எனது 'கோடிட்ட இடங்களை' நிரப்பியர் குரு பாக்யராஜ்! - பார்த்திபன்

திரையுலகில் எனது 'கோடிட்ட இடங்களை' நிரப்பியர் குரு பாக்யராஜ்! - பார்த்திபன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையுலகில் எனது கோடிட்ட இடங்களை நிரப்பியவர் குரு பாக்யராஜ்தான் என்று கூறினார் இயக்குநர் பார்த்திபன்.

தனது படத்தின் தலைப்புகளை மிக வித்தியாசமாக வைப்பதில் ஏகத்துக்கும் மெனக்கெடுபவர் பார்த்திபன். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படத்துக்குப் பிறகு அவர் இப்போது இயக்கி வரும் படத்துக்கு கோடிட்ட இடங்களை நிரப்புக என்று தலைப்பிட்டுள்ளார்.

Parthiban speaks on his Koditta Idangalai Nirappuga

இந்தப் படத்தை ரீல் எஸ்டேட் கம்பெனி எல் எல் பி' மற்றும் 'பையாஸ்க்கோப் பிலிம் பிரேமர்ஸ்' இணைந்து தயாரிக்கின்றன.

சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமையா, சிங்கம்புலி நடிக்கும் இந்தப் படத்துக்கு சத்யா இசையமைக்க, அர்ஜுன் ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்துக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து பார்த்திபன் பேசுகையில், "பிழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதுதான் எங்களின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக...' அந்தப் பிழை ஒரு காதலாக இருக்கலாம், அல்லது வாழ்க்கையாக இருக்கலாம் அல்லது அதற்கும் மேலான ஒன்றாகவும் இருக்கலாம். அது என்ன என்பதை ரசிகர்கள் தான் இந்த கோடிட்ட இடங்களில் நிரப்ப வேண்டும்...

நான் திரையுலகில் காலடி எடுத்து வைத்த போது என்னுடைய வாழ்க்கை கோடிட்ட இடங்களாகத்தான் இருந்தது.... அந்த காலியான இடங்களை நிரப்பியவர் என்னுடைய குருநாதர் பாக்கியராஜ் சார்.... அவருக்குச் சமர்ப்பிக்கும் வகையில் நான் உருவாக்கிய திரைப்படம்தான் இந்த 'கோடிட்ட இடங்களை நிரப்புக'.

மேலும் இந்த திரைப்படத்தில் அவருடைய மகன் சாந்தனு கதாநாயகனாக நடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. அவருடைய திரையுலக வாழ்க்கையில் விடுபட்டிருக்கும் இடங்களை நிரப்பும் திரைப்படமாக எங்களின் 'கோடிட்ட இடங்களை நிரப்புக' இருக்கும்," என்றார் நம்பிக்கையுடன்.

English summary
Director R Parthiban has said that his forthcoming Koditta Idangalai Nirappuga movie will be a break point for actor Santhanu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil