»   »  நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொள்ளும் பார்த்திபனின் திட்டம் இதுதான்!

நட்சத்திர கலைவிழாவில் கலந்துகொள்ளும் பார்த்திபனின் திட்டம் இதுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் சங்க கட்டடம் கட்டுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் வரும் ஜனவரி 6-ம் தேதி மலேசியாவில் கலைநிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்தக் கலைநிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் தயாராகி வருகின்றனர்.

நடிகர் பார்த்திபன் இந்த கலைவிழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார் ஆர்.பார்த்திபன்.

நட்சத்திரக் கலைவிழா

நட்சத்திரக் கலைவிழா

நடிகர் சங்கத்தின் செயலாளரான விஷால், தனது 'இரும்புத்திரை', 'சண்டக்கோழி 2' ஆகிய படங்களின் புரமோஷனுக்கு பயன்படுத்துவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது. 'இரும்புத்திரை' படத்தின் பாடல்கள் இங்குதான் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் தேடும் பார்த்திபன்

தயாரிப்பாளர் தேடும் பார்த்திபன்

இந்நிலையில், 'கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்தை தொடர்ந்து பார்த்திபன் இயக்கி, நடிக்கவிருக்கும் உள்ளே வெளியோ- 2 படத்திற்காக தயாரிப்பாளர்களைத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ள பார்த்திபன் அதற்காகவே மலேஷியாவுக்கு வர இருப்பதாக வெளிப்படையாய் அறிவித்துள்ளார்.

மலேசியா செல்லும் பார்த்திபன்

மலேசியா செல்லும் பார்த்திபன்

பார்த்திபன் இயக்கி நடித்து தயாரித்து 1993-ல் வெளியான படம் 'உள்ளே வெளியே'. ஆபாசமான படம் என்று கடும் கண்டத்தைச் சந்தித்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் பார்த்திபன். இந்தப் படத்தின் தயாரிப்பாளரைத் தேடித்தான் மலேஷியா செல்கிறார்.

சந்திக்கலாம்

சந்திக்கலாம்

"மலேசிய நாட்டிற்கோர் நற்செய்தி! 5, 6, 7 தேதிகளில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் விழாவுக்கும், என அடுத்த படமான 'உள்ளே வெளியே-2' படத்திற்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் மலேசியா வருகிறேன். சந்திக்க விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்'' என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
On January 6th, stars art festival to be held in Malaysia for the purpose of raising funds for the construction of the Nadigar sangam building. Actor Parthiban tweeted about his presence in Malaysia. He plans to commit producer for 'Ulle veliye 2' film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X