twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பருத்திவீரன் இயக்குநர் அமீரின் அம்மா காலமானார்.. சோகத்தில் திரையுலகம்.. பிரபலங்கள் இரங்கல்

    |

    சென்னை: மெளனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் அமீரின் அம்மா காலமானார்.

    Recommended Video

    பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வணங்கான் | ஜெயமோகனின் கதை? *Entertainment

    இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த சேது படத்தில் நடிகராக திரையுலகில் அறிமுகம் ஆன அமீர், அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து மெளனம் பேசியதே படத்தை இயக்கி இயக்குநர் அந்தஸ்த்தை அடைந்தார்.

    பருத்திவீரன் திரைப்படம் இயக்குநர் அமீருக்கு தமிழ் சினிமாவில் தனி அங்கீகாரத்தையும் முன்னணி இயக்குநர் என்கிற அடையாளத்தையும் வழங்கியது.

    டபுள் ஷிப்ட் பண்ணத் தயார்.. கிருத்தி ஷெட்டி எதுக்காக இப்படி சொல்லியிருக்காங்க தெரியுமா?டபுள் ஷிப்ட் பண்ணத் தயார்.. கிருத்தி ஷெட்டி எதுக்காக இப்படி சொல்லியிருக்காங்க தெரியுமா?

    இயக்குநர் அமீர்

    இயக்குநர் அமீர்

    இயக்குநர் பாலாவின் சேது படத்தில் சியா விக்ரம் உடன் இணைந்து கல்லூரி மாணவராக நடித்தவர் அமீர். 2002ம் ஆண்டு சூர்யா, த்ரிஷா மற்றும் லைலா நடிப்பில் அவர் இயக்கிய மெளனம் பேசியதே படத்திற்கு இன்னமும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ராம், பருத்திவீரன் படங்களை இயக்கி வந்த அமீர் யோகி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

    பருத்தீவிரன் தந்த அடையாளம்

    பருத்தீவிரன் தந்த அடையாளம்

    நடிகர் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்திவீரன் படத்தை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து பெருமை சேர்த்தவர் இயக்குநர் அமீர். பருத்திவீரன் படத்திற்காக ஏகப்பட்ட விருதுகளையும் சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் அமீர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

    அமீரின் அம்மா காலமானார்

    அமீரின் அம்மா காலமானார்

    இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார் அமீர். இந்நிலையில், அவரது அம்மா பாத்துமுத்து பீவி வயது முதிர்வு காரணமாக காலமான செய்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    இயக்குநர் அமீருக்கு திரை பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

    பிறந்தநாள்

    பிறந்தநாள்

    அந்த அம்மா பாட்டை மறக்க முடியுமா இயக்குநர் அமீர் இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு ஜீவா, சரண்யா பொன்வண்ணன் நடிப்பில் வெளியான ராம் படத்தில் இடம்பெற்ற அந்த 'ஆராரிராரோ' அம்மா பாடலை மறக்க முடியுமா.. யுவன் சங்கர் ராஜா இசையில் இடம்பெற்ற அந்த பாடலை பாடாத மகன்களே தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள் என்கிற அளவுக்கு பலரையும் சென்று சேர்ந்தது.

    சூர்யா படத்தில்

    சூர்யா படத்தில்

    இயக்குநராக ஒரு பக்கம் படங்களை இயக்கி வரும் அமீர், நடிகராக முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறார். யுத்தம் செய், நினைத்தது யாரோ, வடசென்னை, மாறன் உள்ளிட்ட படங்களில் அசுரத் தனமான நடிப்பை வெளிப்படுத்திய இயக்குநர் அமீர், அடுத்ததாக சூர்யாவின் வாடிவாசல் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இறைவன் மிகபெரியவன் படத்தை இயக்கி வருகிறார்.

    English summary
    Paruthiveeran Director Ameer's mother passes away. Kollywood Celebrites mourn for her great loss. Her last rites held in Chennai KK Nagar's Amir house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X