»   »  மலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை தனுஷ் நாயகி

மலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை தனுஷ் நாயகி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பார்வதி மேனன் தான் மலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.

மலையாள திரையுலகில் ஏராளமான திறமையான நடிகைகள் உள்ளனர். பிற திரையுலகோடு ஒப்பிடும்போது மலையாள திரையுலகில் ஹீரோக்களுக்கே சம்பளம் குறைவு தான். ஹீரோயின்களுக்கு அவர்களை விட குறைவான சம்பளமே.

இந்நிலையில் மலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் ஹீரோயின்களின் விபரம் தெரிய வந்துள்ளது.

பார்வதி மேனன்

பார்வதி மேனன்

பார்வதி மேனன் தான் மலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை என்று கூறப்படுகிறது. டேக் ஆஃப் படம் ஹிட்டானதற்கு பிறகு அவர் தனது சம்பளத்தை ரூ. 1 கோடியாக உயர்த்திவிட்டாராம்.

புகார்

புகார்

டேக் ஆஃப் படத்திற்கு முன்பு பார்வதி மேனன் படம் ஒன்றுக்கு ரூ. 30 முதல் 35 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார். மலையாள திரையுலகில் பெரிய நடிகர்கள், இயக்குனர்கள் சர்வசாதாரணமாக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக பார்வதி புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர்

மலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த மஞ்சு வாரியர் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். அவர் படம் ஒன்றுக்கு ரூ. 50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வாங்குகிறார்.

நயன்தாரா

நயன்தாரா

மஞ்சு வாரியரை அடுத்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை நயன்தாரா. கோலிவுட், டோலிவுட்டில் கோடிக் கணக்கில் சம்பளம் கேட்கும் நயன்தாரா மலையாள திரையுலகில் படம் ஒன்றுக்கு வெறும் ரூ. 35 லட்சம் தான் வாங்குகிறார்.

English summary
Parvathy, the talented actress has emerged as the most celebrated actress of her generation, with some exceptional roles. If the reports are to be believed, Parvathy has now also become the highest paid actress of contemporary Malayalam cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil