Don't Miss!
- Sports
உலக கிரிக்கெட் வரலாற்றில் புது முயற்சி.. பயிற்சியாளர் விசயத்தில் பாக். ஏற்பாடு.. ஆப்ரிடி எதிர்ப்பு
- News
11 கலெக்டர்கள் உட்பட ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மேகநாத ரெட்டிக்கு உதயநிதி இலாகாவில் பொறுப்பு!
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
டவுன் ஆகிடாத அபிஷேக்.. சும்மாவே ஆடுவாரே.. பாவனி வேற இப்படி கொம்பு சீவி வீடுறாங்களே?
சென்னை: அபிநய், வருண் என யாருமே செட் ஆகாத நிலையில், பாவனி தற்போது அபிஷேக் உடன் நட்பு பாராட்டி வருகிறார்.
நிச்சயம் பாவனி கையில் உள்ள பஞ்ச தந்திர காயின் அபிஷேக்கை இந்த வார எலிமினெஷனில் இருந்து காப்பாற்றி விடும் என்றே தெரிகிறது.
அந்த அளவுக்கு அபிஷேக்கிற்கு ஆதரவாக பாவனி பேசும் காட்சிகள் ரசிகர்களை இரிடேட் செய்துள்ளது.

அபிஷேக்குடன் பழகும் பாவனி
மதுமிதா, இமான் அண்ணாச்சி உடன் ஆரம்பத்தில் பேசி வந்த சீரியல் நடிகை பாவனி ரெட்டி அபிநய் தன்னை தவறாக பார்ப்பதாக புலம்பிய நிலையில், அவருடனே அதை பற்றி கேட்க அவர் கண்டு கொள்ளாமல் போய் விட்டார். பின்னர் அபிநய் பற்றி வருணிடம் போட்டுக் கொடுத்த பாவனியை வருணும் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில், பாவனியை ஏமாற்றி இந்த வாரம் எஸ்கேப் ஆக துடித்துக் கொண்டிருக்கும் அபிஷேக்கின் வலையில் பாவனி சிக்கி உள்ளார்.

நடிக்கும் அபிஷேக்
ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் ஒவ்வொரு மாதிரியான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு மகா நடிகன் என்பதை நிரூபித்து வருகிறார் அபிஷேக் ராஜா. சோஷியல் மீடியாவில் அபிஷேக் ராஜா தான் தினமும் கன்டென்ட் கிங்காக மாறி உள்ளார். அவருக்கு டஃப் போட்டி கொடுக்க பிரியங்காவும் இற்ங்கி ஆடி வருகிறார்.

யார் கேம் ஆடுறா
அபிஷேக் திடீரென திருந்தி அடுத்த வாரமும் இதே வீட்டுக்குள் இருந்து விடக் கூடாது எனும் ஸ்ட்ராட்டஜியில் பாவனி இப்படி பேசுகிறாரா? அல்லது பாவனியை ஏமாற்றி அபிஷேக் இந்த வாரம் சேவ் ஆகப் போறாரா? யார் மைண்ட் கேம் ஆடுறாங்க என்பது இந்த வார கடைசியில் தெரிந்து விடும்.

கொம்பு சீவி விடுகிறாரே
சும்மாவே அபிஷேக் அந்த ஆட்டம் ஆடுவார். இந்த பாவனி வேற இப்படி கொம்பு சீவி விடுகிறாரே.. இன்னமும் அபிஷேக்கின் அதகளம் அதிகமாக ஆகி விடுமே என பயந்து போய் பிக் பாஸ் ரசிகர்கள் எல்லாம் எச்சரித்து வருகின்றனர். இந்த வாரம் அபிஷேக் வெளியேறுவாரா? மாட்டாரா? என்பது தான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.