வருண், சிபி கதை கனெக்ட் ஆகல...தாமரை கதை பாதி புரியல...ரெவ்யூ கொடுத்த பாவனி

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி துவங்கி பத்து நாட்கள் கடந்து விட்டது. பதினோறாம் நாளான இன்று, நிரூப், அவினய், நாடியா ஆகியோர் தங்களின் கதைகளை பகிர்ந்தனர். நாடியாவின் கதையை கேட்டு ஐக்கி பெர்ரி கண்கலங்கி அழுதார்.

நாடியா தன் கதையை கூறிய பிறகு பாவனியும், இமான் அண்ணாச்சியும் கார்டனில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பாவனி, வருண், சிபி ஆகியோரின் கதைகள் எனக்கு கனெக்ட் ஆகவேயில்லை. வருண் கதையில் எனக்கு பல குழப்பங்கள் வந்து விட்டது. சிபி அவர் கதையை சிரித்துக் கொண்டே சொல்லி முடித்து விட்டார். அதனால் சிரிப்பு தான் வந்தது என்கிறார்.

 Pawani give review about Varun, Sibi and Thamarai selvis story

அதற்கு அண்ணாச்சி, அவங்க எல்லாம் பெரியதாக எதையும் பார்க்கவில்லை. இது இது தான், இப்படி என கதையை சொல்லி முடித்து விட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டோரி உள்ளது என்கிறார். அப்போது அங்கு வரும் தாமரையை காட்டி, இந்த அம்மாவின் கதை புரிந்ததா என கேட்கிறார்.

அதற்கு பாவனி, பாதி புரிந்தது. பாதி புரியல. கடைசியில் தான் தெரிந்தது இவருக்கு இரண்டாவது திருமணமாகி, பையன் இருக்கிறான் என்று என்கிறார். அப்போது குறுக்கிடும் தாமரை, நான் தெளிவாக தான் சொன்னேன். ஆனால் உனக்கு தான் புரியல. இப்படியுமா ஒரு தாய் இருப்பார்கள், தாயிடம் இருந்து பிள்ளையை பிரிப்பார்கள் என்கிறார். அதற்கு பாவனி, அது பற்றி எனக்கு தெரியவில்லை. சிலர் அப்படி இருப்பார்கள் என்கிறார்.

தொடர்ந்து, வாழ்க்கையில் எனக்கு சந்தோஷம் என்பதே இல்லை என்கிறார் வேதனையுடன். அப்போது அதை மறுக்கும் பாவனி, அப்படி சொல்லாத தாமரை. எல்லாருக்குள்ளும் ஒரு வேதனை உள்ளது என்கிறார். இமான் அண்ணாச்சியும், ஒவ்வொரு வேதனை இருக்கு. ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதம் என்கிறார் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கியபடி.

அப்போது தாமரை, வாழ்க்கையில் நான் ஆசைப்பட்ட ஒரே விஷயம் 10 பவுனில் தாலி போட்டுக் கொள்ள வேண்டும் என்று. தாலி போட்டுக் கொள்ள வேண்டும் தான் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்காமலே போனது என்றார்.

அதற்கு பாவனி, கவலைப்படாத கிடைக்கும். இனி போட்டுக் கொள்வாய் என தைரியமாக சொல்பவர், திடீரென குழந்தை தனமாக, ஐய்யோ அம்மா தாலி பற்றி பேசாத. நான் அவ்வளவு அழகாக தாலி வாங்கி வைத்திருந்தேன் என்கிறார் சோகம் கலந்த சிரிப்புடன்.

தாமரை செல்வியின் கதையை கேட்டு விட்டு பலரும் கண்கலங்கினர். மற்ற ஹவுஸ்மெட்கள் ஆறுதல் கூறினர். அப்போது எழுந்து வந்த அபிஷேக் உன் பையன் கண்டிப்பா ஒரு நாள் உன்னை தேடி வருவான். நீ கண்டிப்பாக டைட்டில் வின் பண்ணுவ என வாழ்த்து கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X