வந்ததுமே அபிஷேக்கிடம் காயினை கொடுத்த பாவ்னி...என்னடா நடக்குது இங்க ?

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 48 வது நாளை எட்டி உள்ளது. இதில் 21 வது நாளில் எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா 47 வது நாளில் மீண்டும் வைல்கார்டு என்ட்ரி மூலம் வீட்டிற்குள் வந்துள்ளார்.

அவர் திரும்பி வந்தது ராஜு, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலருக்கும் விருப்பம் இல்லை. இதை அவர் வெளிப்படுத்தி விட்டனர். இந்நிலையில் வந்த முதல் நாளே பாவ்னிக்கு சப்பாத்தி ஊட்டி விடுகிறார். பதிலுக்கு பாவ்னியும், அபிஷேக்கிற்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். இதை விரும்பாமல் ராஜுவிடம் புலம்புகிறார் இமான் அண்ணாச்சி.

காயினை கொடுத்த பாவ்னி

காயினை கொடுத்த பாவ்னி

மற்றவர்கள் அபிஷேக்கின் ரீஎன்ட்ரியை விரும்பாத நிலையில், அவர் வந்த அன்றைக்கு இரவு தன்னிடம் இருக்கும் காயினை அபிஷேக்கை தருகிறார் பாவ்னி. அதன் பவரை விளக்கி சொல்லும் பாவ்னி, இனி வரும் வாரங்களில் நீ நாமினேட் செய்யப்பட்டால் இதன் பவரை பயன்படுத்தி உன்னை காப்பாற்றிக் கொள் என்கிறார். அபிஷேக் வேண்டாம் என மறுத்த பிறகும் பாவ்னி அதை அவரிடம் கொடுக்கிறார்.

காயினை திருப்பிக் கொடு

காயினை திருப்பிக் கொடு

பாவ்னிக்கு தனக்கு காயின் கொடுத்ததை பிரியங்காவிடம் வந்து சொல்கிறார் அபிஷேக். அதற்கு பிரியங்கா, எதற்காக அவள் உனக்கு கொடுக்க வேண்டும். அதை அவளிடம் திருப்பி கொடுத்து விடு அல்லது தலையணைக்கு பின்னால் வைத்து விடு. மற்றவர்களிடம் இருக்கும் காயினை இதற்கு பிறகு ஏதாவது செய்து நாம் எடுக்கலாம். இப்படி கொடுப்பது வேண்டாம்.

பிரியங்கா சொல்ல ஐடியா

பிரியங்கா சொல்ல ஐடியா

இன்னொரு முறை மக்கள் உன்னை நாமினேட் செய்தால் பேசாமல் மூட்டை கட்டிக்கிட்டு வெளியே போய் விடு. இப்படி ஒரு காயினை வைத்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டாம் என்கிறார் பிரியங்கா. அதை அபிஷேக்கும் ஏற்றுக் கொள்கிறார்.

எதற்காக அவருக்கு கொடுத்தார்

எதற்காக அவருக்கு கொடுத்தார்

இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், என்னடா நடக்குது இங்க. எதற்காக பாவ்னி, அபிஷேக்கிடம் காயினை கொடுத்தார். இத்தனை நாட்கள் வீட்டில் இருந்த யாருக்கும் கொடுக்காமல் பாதுகாத்து வைத்திருந்த காயினை, சட்டென யோசிக்காமல் அபிஷேக்கிடம் எதற்காக கொடுத்தார் என கேட்டுள்ளார்.

உள்குத்து ஏதாவது இருக்கா

உள்குத்து ஏதாவது இருக்கா

பல வாரங்களாக நாமினேட் செய்யப்பட்ட போதும் தன்னை காப்பாற்றிக் கொள்ள பயன்படுத்தாமல் வைத்திருந்த பாவ்னி, அபிஷேக் காப்பாற்ற அதுவும் அவர் வந்ததும், நாமினேஷனில் கூட இல்லாத ஒருவர், எந்த வாரம் நாமினேஷன் செய்யப்படுவார் என தெரியாத ஒருவருக்காக எதற்காக கொடுத்தார். இதுல ஏதாவது உள்குத்து இருக்குமோ என பலர் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X