»   »  என் தேசப்பற்றையே சந்தேகப்பட வைக்கிறது காவிரி விவகாரம்! - பிசி ஸ்ரீராம் #CauveryIssue

என் தேசப்பற்றையே சந்தேகப்பட வைக்கிறது காவிரி விவகாரம்! - பிசி ஸ்ரீராம் #CauveryIssue

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: என் தேசப்பற்றையே சந்தேகப்பட வைக்கிறது காவிரி விவகாரம் என்று பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் பாராட்டுக்களைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம். பொதுப் பிரச்சினைகள் குறித்து அதிகம் பேசாதவரான ஸ்ரீராம், காவிரி விவகாரம் குறித்து தனது கருத்தை முதல் முறையாகத் தெரிவித்துள்ளார்.

PC Srirams painful tweer over Cauvery Issue

தனது முகநூல் பக்கத்தில், "நமது தாய் வீடு என்று நம்பிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில், தண்ணீரைக் கூட சுமூகமாகப் பங்கிட்டுக் கொள்ள முடியவில்லை. இது என் தேசப்பற்றையே சந்தேகப்பட வைக்கிறது," என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

எந்தப் போராட்டங்களிலும் கலந்து கொள்ளாவிட்டாலும், பிசி ஸ்ரீராம் போன்ற பிரபலங்கள் பலரது நிலைப்பாடும் மனநிலையும் இப்படித்தான் உள்ளது. மோடி அரசின் 'மிகப் பெரிய சாதனை' இதுதான்!

English summary
PC Sriram painfully told that he has started to doubt his patriotism in Cauvery Issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X