18+ அடல்ட் காமெடி படம் பெருசு.. இந்தியில் ரீமேக்.. இயக்குநர் யார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் வைபவ், சுனில் ரெட்டி, நிஹாரிகா, சாந்தினி தமிழரசன், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் அடல்ட் காமெடி குடும்ப படமாக வெளியான திரைப்படம் தான் பெருசு. அனைத்து குடும்பங்கள் கொண்டாடிய இத்திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுனில், வைபவ் ஆகிய இருவரும் ஊரில் மதிப்பும் மரியாதையும் பெற்ற பெருசு ஹாலாஸ்யத்தின் மகன்கள்.
பெருசு ஊரில் தனது நண்பர்களுடன் வயதான காலத்திலும் கெத்தாக வலம் வருகிறார். ஆற்றில் பெண்கள் குளிக்கும் இடத்தில் இளைஞன் ஒருவனை அடிக்கிறார் அந்த பெருசு. அதற்காக அவரை பழிவாங்க அவன் துடிக்கிறான். வீட்டில் வந்து டிவி பார்த்துக் கொண்டு இருந்த பெருசு திடீரென இறந்து போகிறார். ஆற்றங்கரையில் அப்பா செய்தவேலைக்காக திட்டிக் கொண்டே வரும் சுனில் அப்பா இறந்துக்கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாவதை விட அப்பாவின் இடுப்புக்கு கீழ் ஏற்பட்ட வினோதத்தை பார்த்து ஷாக் ஆகிறான்.

பெருசு: இதனால், சடலத்தை வெளியே காட்ட முடியாத சிக்கல் உண்டாகிறது. இதனால் குடும்பமே அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறார்கள். இதைப் பெரிய அவமானமாக நினைத்து ஊர் மக்களிடமிருந்து இதை மறைக்க நினைக்கின்றனர். இந்தக் குழப்பத்துக்கு இடையே இறுதிச் சடங்கை எப்படி செய்தார்கள், இறுதிச் சடங்கின்போது வெளியே வந்த உண்மைகள் என்னென்ன என்பது தான் பெரிசு படத்தின் கதை. பெருசு என்ற படத்தின் டைட்டிலே இரட்டை அர்த்த வசனத்துடன்தான் இருக்கிறது. படத்திலும் பல எதிர்பாராத நேரங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் வந்து பலரை வயிறு குலுங்க வைத்தது. அதிலும், ஆண்களுக்கு, தங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ளும் பல விஷயங்கள் படத்தில் இருந்ததால், அதுவும் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது. படம் நல்ல வசூலை அள்ளியது.
இந்தி ரீமேக்: இலங்கையில ரிலீசாகி சர்வதேச அளவில் பல விருதுகளையும், பாராட்டையும் பெற்ற 'டெண்டிகோ' படம் தான் தமிழில் பெருசு என்ற பெயரில் ரீமேக்கானது. தற்போது பெரிசு படத்தை இந்தியில் இயக்குனர் ஹன்சல் மேத்தா ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படத்தில் உள்ள காமெடி காட்சிகள் தன்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததால் இதை ரீமேக் செய்யப்போவதாக அவர் கூறி இருக்கிறார். இணையத் தொடரின் இயக்குநரான ஹன்சல் மேத்தா மற்றும் தயாரிப்பாளர் முகேஷ் சப்ரா ஆகியோர் இணைந்து பெருசு படத்தை இந்தி ரீமேக் உரிமையை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











