»   »  நான் கடவுள் படத்தில் 9 மாதம் நடித்தேன்.. சம்பளமே தரல! - மாற்றுத் திறனாளி சாந்தி குற்றச்சாட்டு

நான் கடவுள் படத்தில் 9 மாதம் நடித்தேன்.. சம்பளமே தரல! - மாற்றுத் திறனாளி சாந்தி குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர்: நான் கடவுள் படத்திற்காக ஒன்பது மாதம் நடித்தேன் எனக்கு இன்னும் சம்பளம் கிடைக்கவில்லை என மாற்றுத் திறனாளி நடிகை சாந்தி கூறியுள்ளார்.

நேற்று முதல் வாட்ஸ்ஆப்பில் ஒரு வீடியோ வலம் வருகிறது. அந்த வீடியோவில் இருப்பவர் பெயர் சாந்தி. நான் கடவுள் படத்தில் நடித்த மாற்றுத் திறனாளி. இப்போது திருச்செந்தூர் கோயில் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறார்.

Physically challenged actress alleged Naan Kadavul producer

பாலா இயக்கி தேசிய விருது வென்ற நான் கடவுள் படத்துக்காக 9 மாதங்கள் இந்தப் பெண் வேலை செய்திருக்கிறார்.

ஆனால் இன்று வரை அதற்கான சம்பளம் கிடைக்கவில்லையாம். படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இப்போது சம்பளம் தராவிட்டாலும் பரவாயில்லை, எனக்கு ஏதாவது நடிக்க வாய்ப்புகள் அதை வைத்து சமாளித்துக் கொள்வேன் என்கிறார் சாந்தி.

சரியாகப் பேசக்கூட முடியாத இந்தப் பெண்ணை, கதையின் இயல்புத் தன்மைக்காக 9 மாதங்கள் பயன்படுத்திக் கொண்டவர்கள், சம்பளம் மற்றும் சரியான வசதிகள் செய்து கொடுத்திருக்க வேண்டாம். விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய உருக்கமான அந்தப் படத்துக்குப் பின்னால் இப்படி ஒரு கோரக் கதையா?

English summary
Santhi, a physically challenged actress who appeared in Bala's Naan Kadavul has alleged that the producer of the movie was nothing paid for her 9 month work for the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil