»   »  சோனாக்ஷி அண்ணனின் திருமண வரவேற்பில் ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ்

சோனாக்ஷி அண்ணனின் திருமண வரவேற்பில் ரஜினி, ஐஸ்வர்யா தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவின் மகன் குஷ் சின்ஹாவின் திருமண வரவேற்பில் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார்.

பாலிவுட் நடிகரும், பாஜக எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹாவின் மகன் குஷ் சின்ஹா லண்டனைச் சேர்ந்த தருணா அகர்வாலை கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பையில் திருமணம் செய்து கொண்டார். திருமண நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இந்நிலையில் திங்கட்கிழமை மாலை மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ரஜினி

ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அமிதாப்

அமிதாப்

அமிதாப் பச்சன் தனது மனைவி ஜெயாவுடன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர். அவர்கள் திருமணத்திற்கும் வந்திருந்தனர்.

கஜோல்

கஜோல்

நடிகை கஜோல் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். ஆனால் அவருடன் அவரது கணவர் அஜய் தேவ்கன் வரவில்லை.

ரித்தேஷ்

ரித்தேஷ்

நடிகரும், நடிகை ஜெனிலியாவின் கணவருமான ரித்தேஷ் தேஷ்முக் பாரம்பரிய உடையில் வந்திருந்தார்.

விவேக் ஓபராய்

விவேக் ஓபராய்

நடிகர் விவேக் ஓபராய் தனது மனைவி பிரியங்காவுடன் சத்ருகன் சின்ஹா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்டார்.

ரேகா

ரேகா

நடிகை ரேகா பட்டுப்புடவை அணிந்து நிறைய நகை, நிறைய மேக்கப்போட்டு வந்திருந்தார்.

ரிஷி கபூர்

ரிஷி கபூர்

நடிகர் ரிஷி கபூர், தனது மனைவியும் நடிகையுமான நீத்து கபூருடன் வந்திருந்தார்.

சோனாக்ஷி

சோனாக்ஷி

நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது தந்தை, தாய் பூனம், சகோதரர் லவ் சின்ஹா ஆகியோருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

குடும்ப புகைப்படம்

குடும்ப புகைப்படம்

சத்ருகன் சின்ஹா தனது குடும்பத்தார் மற்றும் தனது மருமகளின் குடும்பத்தாருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

English summary
Superstar Rajinikanth attended fellow actor Shatrughan Sinha's son Kush's wedding reception. Aishwarya Dhanush was seen in the function with her dad Rajini.
Please Wait while comments are loading...