Don't Miss!
- News
செங்கோட்டையனா?.. "கமலாலய கசப்பு".. இதெல்லாம் யார் கேட்டது.. ஒரே நாளில் 2 ரியாக்ஷன்.. கவனித்த பாஜக
- Finance
அதானி குழுமத்தில் 2 நிறுவனங்களுக்கு Negative ரேட்டிங்.. S&P குளோபல் அறிவிப்பு..!
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
முகத்தில் ரத்தம் வழிய…பிசாசாக மாறிய ஆண்ட்ரியா… பிசாசு 2 படத்தின் மிரட்டும் போட்டோஸ் !
சென்னை : வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து இயக்கி வரும் மிஸ்கின் தற்போது பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
என்ன சொல்றீங்க.. இயக்குநர் ராஜமெளலி படத்தோட ஹீரோ விஜய்க்கு வில்லனா? தளபதி 66 ஹாட் அப்டேட்!
இத்திரைப்படத்தின் அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்த நிலையில், இப்படத்திலிருந்து ஆண்ட்ரியாவின் பிரத்யேக புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நல்ல பேய்
பேய் திரைப்படங்கள் என்றாலே கொல்லும்... பயமுறுத்தும். அதுவும் பிசாசுனா கேட்கவே வேண்டாம் படமே திகிலாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில். பிசாசு படத்தில் வந்த பேய் தேவதையாக வந்து அனைவரையும் கவர்ந்தது. பிசாசு படத்தில், நல்லது செய்யும் பேய் என ஒரு விசித்திரமான கதையை நமக்கு கொடுத்து இருப்பார் மிஷ்கின். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆண்ட்ரியா
பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடரந்து பிசாசு 2 திரைப்படத்தை இயக்கி உள்ளார் மிஷ்கின். இத்திரைப்படத்தில் பிரதான கதாபாத்திரத்தில் நடிகை ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி இப்படத்தில் கௌரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்
ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். மேலும்,இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் பாத் டப்பில் ரத்தம் படிந்த கால்களோடு கையில் சிகரெட் பிடித்தபடி வெளியான போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டியது.

முதல் பாடல்
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நடைபெற்றது. தற்போது அனைத்து கட்ட படப்பிடிப்புகளும் முடிவடைந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. மேலும், இத்திரைப்படத்தின் முதல் பாடலான உச்சந்தல ரேகையில் என்ற பாடல் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முகத்தில் ரத்தம் வழிய
இந்நிலையில், பிசாசு 2 படத்திலிருந்து ஆண்ட்ரியாவின் பிரத்யேக புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் ஆண்ட்ரியா வெள்ளை நிற உடையில் மிகவும் சாந்தமாக காட்சி அளிக்கிறார். மேலும் ஒரு புகைப்படத்தில் ஆக்ரோஷமான பார்வையுடன் முகத்தில் ரத்தம் வழிய பார்ப்பதற்கே மிகவும் பயங்கரமாக இருக்கிறார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

முக்கிய ரோலில்
பிசாசு 2 படத்தில் நவம்பர் ஸ்டோரி படத்தில் நடித்த நமீதா கிருஷ்ணமூர்த்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் 'பிசாசு 2' படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளார்.

பல படங்கள் கைவசம்
நோ என்டரி, வட்டம்,மாளிகை,கா , அரண்மனை 3 என அரை டசன் படங்களை நடிகை ஆண்ட்ரியா கையில் வைத்துள்ளார். கோலிவுட்டில் படு பிஸியான நடிகையாக ஆண்ட்ரியா இருப்பதால், தன் சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மற்ற முன்னணி நடிகைகள் ஆண்ட்ரியாவின் இந்த வளர்ச்சி கண்டு வியந்துள்ளனர்.