»   »  என்னா படம்! ‘பிகே’ வை புகழும் ராதிகா!!

என்னா படம்! ‘பிகே’ வை புகழும் ராதிகா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அமீர்கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பிகே. இந்து மத நம்பிக்கைகளை சாடுவதாக உள்ள இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகள் போராடி வந்தாலும், இந்த படம் 300 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

இதற்கு முன் அமீர்கான் நடித்த "தூம் - 3" திரைப்படம் 271.82 கோடி ரூபாய் வசூல் செய்து முதலிடத்தில் இருந்தது. இப்போது பிகே படம் 300 கோடி வசூலித்த முதல் பாலிவுட் திரைப்படம் என்ற பெயரை பெற்றுள்ளது. படத்திற்கு பல சர்ச்சைகள் வந்தாலும் படத்தை மக்கள் இன்னும் விரும்பி பார்க்கச் செல்கின்றனர்.

எந்த அளவிற்கு எதிர்ப்பு இருக்கிறதோ அதை விட பிகே படம் அனைத்து தரப்பினரிடமும் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

அமீர் கானின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தைப் பார்த்த தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

ஐந்துக்கு நூறு ஸ்டார்

ஐந்துக்கு நூறு ஸ்டார்

பிகே படத்தை பார்த்த தனுஷ் ஐந்துக்கு நூறு ஸ்டார் கொடுத்த கையோடு இயக்குநரை ஆகா ஓகோ என்று புகழ்ந்திருந்தார்.

சமந்தா

சமந்தா

இதேபோல நடிகை சமந்தா, சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘' 'பிகே' எனது மனம் நிறைவாக இருக்கிறது. ஹிரானியின் அற்புதமான படைப்பு. மற்றும் அமீர் கான் கடவுளின் சிறப்பான உருவாக்கம். மிகவும் திறமைசாலி '' என ட்விட் செய்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் குமார்

ஜி.வி.பிரகாஷ் குமார்

பிகே' பார்த்தேன்! அமீர் கானிடமிருந்து அற்புதமான நடிப்பு. ராஜ்குமார் ஹிரானியிடமிருந்து அபாரமான வொர்க் என ட்விட் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.

சிவகார்த்திக்கேயன்

சிவகார்த்திக்கேயன்

படம் பார்த்த சிவகார்த்திக்கேயன், இப்படியொரு நல்ல படம் கொடுத்த அமீர்கான், ஹிரானிக்கும் நன்றி என்று டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

ராதிகாவும் பாராட்டு

ராதிகாவும் பாராட்டு

இந்த வரிசையில் பிகே இணைந்துள்ளார் ராதிகா சரத்குமார். தனது சீரியல்களில் மூடநம்பிக்கைகளை அவ்வப்போது சாடும் ராதிகா பிகே படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

English summary
Aamir Khan’s PK, which was released on December 19. Actress Radhika has shared her comments on the movie in her official social forums.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil