Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் விவாகரத்துக்கு காரணமே அந்த விஷயம்தான்.. சுசி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்த பாடகி சுசித்ரா!
Recommended Video
சென்னை: தனது விவாகரத்து மற்றும் சுசி லீக்ஸ் விவகாரம் குறித்து பாடகி சுசித்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.
ஆர்ஜே, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி, நடிகை, பாடகி என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. இவரது துள்ளலான குரலுக்கு சொக்காதவர்களே இருக்க முடியாது.
சினிமா வட்டாரத்தில் பெரும் நட்பு வட்டாரத்தை கொண்டிருந்தார் சுசித்ரா. இரவில் பார்ட்டி, ஆட்டம் பாட்டம் என தனது சினிமா நண்பர்களுடன் வாழ்க்கை கொண்டாடி கொண்டிருந்தார்.

அந்தரங்க வீடியோக்கள்
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷ், டி.டி, ஹன்சிகா, த்ரிஷா, அனிருத், ஆண்ட்ரியா, ராணா, ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், பாடகி சின்மயி ஆகியோர் அடங்கிய அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியானது.

தொடர்ந்து ரிலீஸ்
இதனால் ஒட்டுமொத்த கோலிவுட்டும் அதிர்ச்சியில் திகைத்து நின்றது. தொடர்ந்து டைமிங் அறிவித்து போட்டோக்களும் வீடியோக்களும் வெளியிடப்பட்டு வந்தன.

ஹேக் செய்யப்பட்டது
இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளான சுசித்ரா, தன்னுடைய கணக்கிலிருந்து போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தான் வெளியிடவில்லை என்றும் தனது கணக்கை ஹேக் செய்துவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

மனநிலை சரியில்லை
தனது டிவிட்டர் கணக்கை ஹேக் செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கூட அளித்தார் சுசித்ரா. இதன் பிறகு சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை என்று பரவலாகச் செய்திகள் வெளியாகின.

பலருக்கும் பாதிப்பு
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள சுசித்ரா, 4.5 லட்சம் பேர் பின் தொடரும் என் ட்விட்டர் பக்கத்தை யாரோ தவறாக பயன்படுத்தினர். இதனால் பலருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

தெரிய வரும்
இதனால் விவாகரத்தும் ஏற்பட்டதால் எனக்கு பெரும் மன அழுத்தம் ஏற்பட்டது. தேவையில்லாமல் தனுஷ், அனிருத் எல்லாரையும் இழுத்துவிட்டார்கள். அதை நான் பார்க்கவே இல்லை. அதை யார் செய்தார்கள் என்பது எனக்கு தெரியவரும் என்று நினைக்கிறேன்.

சுசி குக் ஹேஷ்டேக்
இதனால் நான் படிப்பில் கவனம் செலுத்தலாம் என்று நினைத்தேன். எனக்கு சமையல் செய்வது பிடிக்கும். அதனால் லண்டனுக்குச் சென்று பிரெஞ்ச் குக்கிங் கற்றுக் கொண்டு திரும்பியிருக்கிறேன். அதை யூடியூபில் சுசி குக் என்ற ஹேஷ்டேக்குடன் வெளியிட உள்ளேன்.

இப்படி ஒரு பேட்டி
சமீபத்தில் பாடகி சுசித்ராவை காணவில்லை என்று தங்கை சுஜிதா போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுசித்ராவை மீட்ட போலீசார் அவரை மன நல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் சுசித்ரா இப்படி ஒரு பேட்டியை அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.