twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜித் சார் மீது எனக்கு மரியாதை இருக்கு.. ப்ளீஸ், தப்பான செய்தியை பரப்பாதீங்க: எஸ்.ஜே.சூர்யா

    தல 60 படத்தில் தான் வில்லனாக நடிக்கவில்லை என எஸ்.ஜே.சூர்யா விளக்கமளித்துள்ளார்.

    |

    Recommended Video

    தவறான செய்தியை பரப்பாதீங்க எஸ்.ஜே.சூர்யா ட்வீட்- வீடியோ

    சென்னை: அஜித் மீது தனக்கு மரியாதை இருப்பதாகவும், அதனால் தன்னைப் பற்றி தவறான செய்தியைப் பரப்ப வேண்டாம் எனவும் நடிகரும், இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

    வாலி, குஷி என மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. தான் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வந்தவர், 'ஸ்பைடர்', 'மெர்சல்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

    சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

    சூடு பிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்.. விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் அணி போட்டி! சூடு பிடிக்கும் நடிகர் சங்கத் தேர்தல்.. விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் அணி போட்டி!

    தல 60 :

    தல 60 :

    இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் - அஜித் காம்போவில் உருவாக இருக்கும் 'தல 60' படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது.

    போனிகபூருடன் சந்திப்பு:

    போனிகபூருடன் சந்திப்பு:

    வாலி படத்தில் அஜித்தை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா, தல 60 படத்தில் அவருக்கே வில்லனாக நடிக்கிறார் எனக் கூறப்பட்டது. அதற்குத் தகுந்தாற்போல், அவரும் போனிகபூரை நேரில் சந்தித்தார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நிச்சயம் இப்படத்தில் மிரட்டலான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா இருப்பார் என அவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

    விளக்கம்

    ஆனால், தான் அஜித்திற்கு வில்லனாக நடிக்கவில்லை, அது வெறும் வதந்தி தான் என விளக்கமளித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தல 60 படத்தில் நான் நடிப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை. அஜித் மீதும், போனி கபூர் மீதும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம்' என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    தர்பார்:

    தர்பார்:

    முன்னதாக, ரஜினியின் தர்பார் படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியானது. பின்னர் விஜய்யின் தளபதி 64 படத்தில் அவர் வில்லனாக ஒப்பந்தமாகி இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட படக்குழுக்கள் இந்தத் தகவலை மறுத்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actors SJ Surya denies the news that he is casting as villain in 'Thala 60' and requests not to spread rumours.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X