»   »  முதல்வர் தான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்... பரபரப்பை ஏற்படுத்தும் நடன இயக்குநர்

முதல்வர் தான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்... பரபரப்பை ஏற்படுத்தும் நடன இயக்குநர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'தமிழக முதல்வர்தான் எங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்' என்று நடன இயக்குநர் சிவசங்கர் தெரிவித்திருப்பது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடா திருடி, கண்ணா லட்டு தின்ன ஆசையா உட்பட 1௦௦௦ க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடனம் அமைத்துப் புகழ்பெற்றவர் சிவசங்கர்.

சிவசங்கர் மீது அவரது மூத்த மருமகள் ஜோதி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

திருமணம்

திருமணம்

இந்நிலையில் சிவசங்கர் இதுகுறித்து ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் '' சினிமா துறையின் உச்சத்தில் இருக்கிற என்மீது எனது மருமகள் ஜோதி புகார் அளித்திருக்கிறார்.2013ம் ஆண்டு எனது மகன் விஜய் கிருஷ்ணா- ஜோதி இருவருக்கும் திருமணம் நடந்தது. ஜோதி குடும்பத்தாரிடம் வரதட்சணை எதுவும் நான் கேட்கவில்லை.

தலைமறைவு

தலைமறைவு

திருமணம் முடிந்ததும் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்தது. இதனால் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்தோம்.ஆனால் அங்கும் சண்டை வந்ததால் எனது மகன் ஜோதியுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறி வீட்டுக்கு வந்துவிட்டான்.ஜோதியும் என் மகனுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறிவிட்டார். தற்போது திடீரென ஜோதி எனது வீட்டிற்கு வந்து பிரச்சினை செய்கிறார். இவரின் பொய் புகார்கள் காரணமாக நாங்கள் குடும்பத்துடன் சிலநாட்கள் தலைமறைவாக இருக்க வேண்டியதாயிற்று.

10 கோடி

10 கோடி

எனது மகன் ஜோதியுடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கிறான். ஆனால் ஜோதியும் அவரது குடும்பத்தாரும் எங்களிடமிருந்து 10 கோடி பணமும், எங்களின் சொந்த வீட்டையும் கேட்டு மிரட்டுகிறார்கள்.

முதல்வர்

முதல்வர்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்தப் பிரச்சினையில் தலையிட்டு எங்களைக் காப்பாற்ற வேண்டும்.இல்லை என்றால் குடும்பத்தோடு நாங்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை'' என்று கூறியிருக்கிறார்.

English summary
Dance Master Sivasankar says '' Please save my family from our daughter in law. otherwise We will Commit Suicide''.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil