twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போபாலை சேர்ந்தவர்களுக்கு எதிரான கமெண்ட்... தி காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் மீது வழக்குப்பதிவு

    |

    மும்பை : கடந்த 11ம் தேதி வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் சிறப்பான வரவேற்பையும் விமர்சனங்களையும் மற்றும் வசூலையும் பெற்று வருகிறது. விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கடந்த 80களில் காஷ்மீரி பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறியதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்

    தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம்

    காஷ்மீரில் கடந்த 1990களில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்து மதத்தை சேர்ந்த பண்டிதர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்கமாக எச்சரிக்கை கொடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கி மூலமாகவும் இந்த எச்சரிக்கை கொடுக்கப்பட்டது.

    காஷ்மீர் பண்டிதர்கள் குறித்த கதைக்களம்

    காஷ்மீர் பண்டிதர்கள் குறித்த கதைக்களம்

    இதையடுத்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிதர்கள் காஷ்மீரில் தங்களது வாழ்விடங்களை விட்டுவிட்டு வெளியேறி நாட்டின் பல பகுதிகளுக்கு சென்றனர். அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் அவர்களின் வெளியேற்றத்தை மையமாக வைத்து பாலிவுட்டில் தற்போது தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.

    விவேக் அக்னிஹோத்ரி இயக்கம்

    விவேக் அக்னிஹோத்ரி இயக்கம்

    விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் அனுபம் கெர், பல்லவி ஜோஷ், பாஷா சும்ப்லி, தர்ஷன் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 11ம் தேதி ரிலீசான இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் மோடியின் பாராட்டிற்கும் உள்ளாகியுள்ளது.

    விவேக் அக்னிஹோத்ரி பேட்டி

    விவேக் அக்னிஹோத்ரி பேட்டி

    படத்தில் பல மாநிலங்களில் வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. படத்திற்கு அச்சுறுத்தலும் காணப்பட்ட நிலையில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரிக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் போபால் பகுதியினர் குறித்த விவேக்கின் பேட்டி தற்போது அவருக்கு எதிராக கிளம்பியுள்ளது.

    போபாலை சேர்ந்தவர்கள் குறித்த கமெண்ட்

    போபாலை சேர்ந்தவர்கள் குறித்த கமெண்ட்

    சமீபத்திய பேட்டியில் போபாலை சேர்ந்தவர்கள் அவர்களின் நவாமி விருப்பங்களையடுத்து எப்போதும் ஓரினச்சேர்க்கையாளர்களாக கருதப்படுவதாக அவர் தெரிவித்திருந்தார். இதையடுத்து அவர்மீது மும்பை வெர்சோவா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விவேக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு

    விவேக்கிற்கு எதிராக வழக்குப்பதிவு

    அவரது இந்தப் பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து அவர்மீது மும்பையை சேர்ந்த ரோஹித் பாண்டே இந்த வழக்கை பதிவு செய்துள்ளார். இந்தப் பேட்டியில் தான் போபாலை சேர்ந்தவன் என்றாலும் தான் அதை வெளிப்படுத்திக் கொள்ள எப்போதுமே விரும்பியதில்லை என்றும் விவேக் தெரிவித்திருந்தார்.

    English summary
    Police complaint against The Kashmir files director Vivek Agnihotri
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X