»   »  தானா சேர்ந்த கூட்டம்.... அமோக முன்பதிவு! #TSK #ThaanaSerndhaKootam

தானா சேர்ந்த கூட்டம்.... அமோக முன்பதிவு! #TSK #ThaanaSerndhaKootam

Posted By:
Subscribe to Oneindia Tamil
தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு இவ்வளவு வரவேற்ப்பா.. ???

சென்னை: பொங்கல் ரிலீசாக வரும் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு முன்பதிவு தொடங்கியது. நாளை வெளியாகும் இந்தப் படத்துக்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவருடைய இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்துள்ளது.

Pongal Movies 2: Thaana Serntha Koottam

குறிப்பாக 'சொடக்கு மேல...' என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் படத்தின் புரொமோஷனுக்காக சென்ற சூர்யா அங்கு ரசிகர்களுடன் 'சொடக்கு' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

படம் நாளை வெளியாகும் நிலையில், நேற்று இந்தப் படத்தின் முன் வெளியீட்டு சிறப்பு நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடந்தது.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியான 'ஸ்பெஷல் 26' படத்தின் கதையைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் தெலுங்கில் 'கேங்' என்ற பெயரில் வெளியாகிறது. மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. சூர்யா மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் தானா சேர்ந்த கூட்டம்.

English summary
The reservation is going on full swing for Surya's Pongal release Thana Serntha Koottam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X