»   »  பொங்கல் ரிலீஸ் அப்டேட்: அறிவிக்கப்பட்டது 8... கன்ஃபர்மானது நாலுதான்!

பொங்கல் ரிலீஸ் அப்டேட்: அறிவிக்கப்பட்டது 8... கன்ஃபர்மானது நாலுதான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு பொங்கலுக்கு இன்னும் 8 தினங்கள்தான் உள்ளன. ஆனால் எத்தனைப் படங்கள் வெளியாகப் போகின்றன என்பதில் இன்னும் தெளிவான விவரம் கிடைக்கவில்லை.

தமிழ் சினிமாவின் பெரிய சீசன் பொங்கல்தான். கிட்டத்தட்ட ஒரு வாரம் ஓபனிங் கிடைக்கும். சுமாரான படமாக இருந்தால் கூட வசூல் கிடைத்துவிடும். எனவே பொங்கலுக்கு படம் வெளியிடுவதில் தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.

இந்த பொங்கலுக்கு 8 படங்கள் வெளியாகும் என முதலில் அறிவித்திருந்தனர்.

ஆனால் இப்போது நான்கு படங்கள் மட்டுமே ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளன.

அவை

பைரவா

பைரவா

விஜய் - கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள இந்தப் படத்தை பரதன் இயக்கியுள்ளார். விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜனவரி 12-ம் தேதியே இந்தப் படம் வெளியாகிறது.

புரியாத புதிர்

புரியாத புதிர்

விஜய் சேதுபதி நடித்துள்ள இந்தப் படம் ஜனவரி 13-ம் தேதி வெளியாகிறது.

புரூஸ் லீ

புரூஸ் லீ

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் இது. இந்தப் படமும் ஜனவரி 13-ம் தேதிதான் வெளியாகிறது.

கோடிட்ட இடங்களை நிரப்புக

கோடிட்ட இடங்களை நிரப்புக

பார்த்திபன் இயக்கத்தில் சாந்தனு நடித்துள்ள இந்தப் படம் ஜனவரி 14, பொங்கல் தினத்தன்று வெளியாகிறது.

மேற்கண்ட படங்களில் முதல் மூன்றும் யு சான்றிதழ் பெற்றுள்ளன. கோடிட்ட இடங்களை நிரப்புக படம் மட்டும் யு ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

English summary
There 4 new Tamil movies including Vijay's Bairava are releasing for this Pongal 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil