»   »  அஜித் ரசிகர்களுக்காக... பொங்கல் ஸ்பெஷல் 'விசுவாசம்' சட்டை! #Viswasam

அஜித் ரசிகர்களுக்காக... பொங்கல் ஸ்பெஷல் 'விசுவாசம்' சட்டை! #Viswasam

Posted By:
Subscribe to Oneindia Tamil
அஜித்தின் 'விசுவாசம்' படத்திற்காக ரசிகர் உருவாக்கிய போஸ்டரில் இருந்த சட்டை விற்பனை

மதுரை : அஜித்தின் 58-வது படமான 'விசுவாசம்' சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிறது. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அஜித்தும் சிவாவும் இந்தப் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைகிறார்கள். பிப்ரவரியில் ஷூட்டிங் தொடங்கும் 'விசுவாசம்' திரைப்படம் 2018 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொங்கல் ஸ்பெஷலாக அஜித்தின் 'விசுவாசம்' படத்திற்காக ரசிகர் உருவாக்கிய போஸ்டரில் இருந்த சட்டை தயாராகி விற்பனையாகி வருகிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

அஜித்தின் 'விவேகம்' படம் ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாகி இருந்தது. அஜித்தின் ஸ்டைல், பட கதை, பாடல்கள் என அனைத்து விஷயங்களும் மாஸாக இருந்தாலும் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றம்.

விசுவாசம்

விசுவாசம்

இந்த நிலையில் அஜித் நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி அமைக்கிறார். படத்தின் டைட்டில் 'விசுவாசம்' என அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் #Viswasam ட்ரெண்ட் ஆனது.

ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள்

ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்கள்

'விசுவாசம்' படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே அஜித் ரசிகர்கள் டைட்டில் போஸ்டர்களையும் வடிவமைத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

மதுரையில் பேனர்

மதுரையில் பேனர்

என்ன நடந்தாலும் சூட்டோடு சூடாக ஃப்ளக்ஸ் பேனர் அடித்து தெறிக்கவிடும் மதுரை ரசிகர்கள் உடனுக்குடன் அஜித்தின் விசுவாசம் படத்தின் டைட்டிலோடு பேனர் அடித்து கொண்டாட்டத்தைத் துவக்கினர்.

 ரசிகர்கள் ஆவல்

ரசிகர்கள் ஆவல்

பட பெயரைத் தாண்டி வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. இசையமைப்பாளர் யுவனும் படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் ரசிகர்கள் சமீபத்தில் எங்களுக்கு விசுவாசம் பட அடுத்த தகவல் வேண்டும் என்ற ஹேஸ்டேக்கை கிரியேட் செய்து ட்ரெண்ட் செய்தனர்.

ரசிகர் உருவாக்கிய ஃபர்ஸ்ட் லுக்

ரசிகர் உருவாக்கிய ஃபர்ஸ்ட் லுக்

ஆனால் படக்குழுவோ அறிவிப்பு வரும் என்று கூட கூறவில்லை. ஆனால், பொங்கலுக்கு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரசிகர் ஒருவர் விசுவாசம் பட ஃபர்ஸ்ட் லுக் ஒன்றை தயார் செய்து வெளியிட்டுள்ளார்.

விசுவாசம் சட்டை

விசுவாசம் சட்டை

அந்த போஸ்டரில் அஜித் அணிந்திருந்த உடை தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரல். அதே மஞ்சள் நிறத்தில் இருக்கும் அந்த சட்டையை இப்போது அஜித் ரசிகர்கள் எல்லோரும் வாங்கி வருகிறார்கள்.

ரசிகர்களுக்கு பொங்கல் கொண்டாட்டம்

ரசிகர்களுக்கு பொங்கல் கொண்டாட்டம்

பொங்கலுக்கு 'விசுவாசம்' படத்தின் அப்டேட் வெளியாகிறதோ இல்லையோ, அஜித்தின் விசுவாசம் ஸ்பெஷல் சட்டையோடு பொங்கலை கொண்டாடத் தயாராகிவிட்டனர் ரசிகர்கள். இந்த சட்டை பெரும்பாலான ஜவுளிக் கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கிறதாம்.

English summary
Ajith's 58th movie 'Viswasam' is directed by Siva. This film is produced by Satyajyothi Films. Ajith fan has made a First Look for 'Viswasam'. Ajith's dress in that poster is now trend among fans. All Ajith fans are now getting the shirt of the same yellow color to celebrate 'Thala' Pongal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X