கலங்க வைக்கும் விக்ரமின் போர் கண்ட சிங்கம்...இப்படி ஒரு செகண்ட் சிங்கிளா

சென்னை : விக்ரம் படத்தின் செகண்ட் சிங்கிளாக போர்கண்ட சிங்கம் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மனதை கரைய வைக்கும் இந்த பாடல் லைக்குகளை அள்ளி வருகிறது.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. படம் பற்றி வெளியாகும் தகவல்கள் ஒவ்வொன்றும் அனைவருக்கும் படம் பற்றிய ஆர்வத்தை தூண்டி வருகிறது.

முதல் பாடலிலேயே சர்ச்சை

முதல் பாடலிலேயே சர்ச்சை

விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக பத்தல பத்தல பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அனித் இசையில் கமலே எழுதி, பாடிய இந்த பாடலில் இடம் பெற்ற சில வரிகள் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை சந்தித்தது. அதே சமயம் நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் நடனமாடி, நடித்துள்ள இந்த வீடியோ பாடல் ரசிகர்களிடம் செம வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இந்த பாடலுக்கு ஆடிய ரீல் வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளினர்.

பட்டையை கிளப்பிய பத்தல பத்தல

பட்டையை கிளப்பிய பத்தல பத்தல

பட்டையை கிளப்பும் இசையுடன் பத்தல பத்தல பாடல் வெளியிடப்பட்டது. யூட்யூப்பில் அதிகமானவர்களால் பார்க்கப்பட்ட பாடல்களின் பட்டியலில் இந்த பாடலும் இணைந்தது. இதைத் தொடர்ந்து விக்ரம் ஆடியோ விழா, கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் டிரைலர் திரையிடப்பட்டது என வரிசையாக விக்ரம் படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

செம செகண்ட் சிங்கிள்

செம செகண்ட் சிங்கிள்

இந்த சமயத்தில் படத்தின் செகண்ட் சிங்கிளாக போர் கண்ட சிங்கம் என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயிரும் நடுங்குதே உன்னை ஏந்திடவே என துவங்கும் இந்த பாடல் மனதை கரைக்கும் வரிகளுடன், அப்பா- மகன் சென்டிமென்ட் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிரிக்கல் பாடல் வெளியிடப்பட்ட 17 நிமிடங்களில் 16,000 லைக்குகளையும், 60,000 பார்வைகளையும் பெற்றுள்ளது.

மனதை உருக்கிய போர்கண்ட சிங்கம்

மனதை உருக்கிய போர்கண்ட சிங்கம்

மனைவியை இழந்த, கண் தெரியாத ஒருவர், கையில் குழந்தையுடன் தனது பாச உணர்வுகளையும், வேதனையையும் சொல்கிறது விக்ரம் செகண்ட் சிங்கிள் பாடல். பாடலின் ஆரம்பத்திலேயே குழந்தை ஒன்று ஒருவரின் விரலை விடாமல் பிடித்தபடி இருப்பது, புத்தர் சிலை ஆகிய காட்சிகளுடன் தான் அமைக்கப்பட்டுள்ளது. பத்தல பத்தல பாடலுக்கு நேர் எதிராக இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

ஆர்வத்தை இப்படி தூண்டுறீங்களே

ஆர்வத்தை இப்படி தூண்டுறீங்களே

Feel of Vikram என்ற கேப்ஷனுடன் இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது. பத்தல பத்தல பாடல் கமலின் டான்ஸ், மாஸ் ஆகியவற்றை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது என்றால், போர் கண்ட சிங்கம் பாடல் படத்தின் கதை என்னவாக இருக்கும். கமலின் அசத்தல் சென்டிமென்ட் நடிப்பை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X