twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசிய திரைப்பட விருதுகள் 2023 : பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்!

    |

    சென்னை : 16வது ஆசிய திரைப்பட விருதுகளுக்கு பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்னம் இயக்கி இருந்தார்.

    இத்திரைப்படத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பார்த்திபன்,விக்ரம் பிரபு, பிரபு,நாசர், பிரகாஷ் ராஜ்,ரகுமான் என ஏராளமானோர் லீட் ரோலில் நடித்திருந்தனர்.

    புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. தோர் நடிகரின் மகன் என்னம்மா சர்ஃபிங் பண்றாரு.. மனைவியும் தான்! புலிக்கு பிறந்தது பூனையாகுமா.. தோர் நடிகரின் மகன் என்னம்மா சர்ஃபிங் பண்றாரு.. மனைவியும் தான்!

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    எம்.ஜி.ஆர்,கமல்ஹாசனின் கனவு திரைப்படமாக இருந்த பொன்னியின் செல்வன் படத்தை இயக்குநர் மணிரத்தினம் இயக்கி முடித்துள்ளார். இத்திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர்

    ரூ.500 கோடி வசூல்

    ரூ.500 கோடி வசூல்

    பொன்னியின் செல்வன் திரைப்படம் பான் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியானது. பொன்னியின் செல்வன் வரலாற்றை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குக்கு படை எடுத்தனர். இத்திரைப்படம் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    பொன்னியின் செல்வன் 6 பிரிவுகளில் தேர்வு

    பொன்னியின் செல்வன் 6 பிரிவுகளில் தேர்வு

    இந்நிலையில், ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் 16வது ஆசிய திரைப்பட விருதுகளில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படம் 6 பிரிவுகளில் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த காஸ்ட்யூம் டிசைன்,சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் ஆகிய பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டது.

    ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு

    ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு

    ஆசிய திரைப்பட விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் படங்களுக்கு மார்ச் 12ஆம் தேதி ஹாங்காங்கில் உள்ள ஹாங்காங் பேலஸ் மியூசியத்தில் விருது வழங்கப்படும். அதேபோல, எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படமும் இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், 2023 ம்ஆண்டிற்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் ஆர்ஆர்ஆர் படம் சிறந்த சர்வதேச படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    English summary
    Manirathnam's Ponniyin Selvan 1 has been nominated for six awards at the 16th Asian Film Awards
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X