twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இரண்டே நாளில் ரூ150 கோடி..தட்டித்தூக்கிய பொன்னியின் செல்வன்!

    |

    சென்னை : பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களில் ரூ.150 கோடியை அசால்டாக தட்டித்தூக்கி உள்ளது.

    70 ஆண்டுகளுக்கு முன்பு கல்கி எழுதிய வரலாற்று சரித்திர நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.

    இத்திரைப்படத்தை இயக்குநர் மணிரத்தினம், அதன் தன்மை மாறாமல் அழகான படைப்பாக கொடுத்து இருக்கிறார். செப்டம்பர் 30ந் தேதி வெளியான இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரைப்பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர்.

     பொன்னியின் செல்வனின் ஒரிஜினல் ஹீரோ..ராஜராஜ சோழனாக கலக்கிய சிவாஜி..1973-லேயே சாதனை படைத்த படம் பொன்னியின் செல்வனின் ஒரிஜினல் ஹீரோ..ராஜராஜ சோழனாக கலக்கிய சிவாஜி..1973-லேயே சாதனை படைத்த படம்

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    புத்தகப் பிரியர்கள் மனம் லாபித்து, மனதில் காட்சிகளை ஓடவிட்டு ரசித்து ருசித்து படித்த திரைப்படம் பொன்னியின் செல்வன். லைகா தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் வெளியான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    குவியும் பாராட்டு

    குவியும் பாராட்டு

    விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி,பார்த்திபன்,சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லெக்மி, விக்ரம் பிரபு, பிரபு என படம் முழுக்க ஒரு நட்சத்திர பட்டாளமே இருந்தாலும், வந்தியத்தேவனாக வந்த கார்த்தியும், நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என வஞ்சும் தீர்க்கும் பழிவாங்கும் பெண்ணாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் நடிப்பை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    முதல் நாள் வசூல்

    முதல் நாள் வசூல்

    செப்டம்பர் 30ந் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான இரண்டே நாளில் 150 கோடியை தாண்டி உள்ளது. முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் ரூ25.86 கோடியாகவும், ஆந்திராவில் ரூ5.93 கோடியாகவும், கர்நாடகாவில் ரூ 5.04 கோடியாகவும், கேரளாவில் ரூ3.70 கோடி என முதல் நாள் வசூல் ரூ. 80 கோடியை தாண்டிவிட்டது.

    தட்டி தூக்கிய வசூல்

    தட்டி தூக்கிய வசூல்

    இந்நிலையில், திரைப்பட வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா தனது ட்விட்டரில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலகம் முழுவதும் ரூ 150 கோடியை வசூலித்துள்ளது. மேலும் அமெரிக்காவில் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் ஏற்கனவே 3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 25.5 கோடி வரை வசூல் கிடைத்துள்ளது. PS1 அமெரிக்காவில் வெளியான 3 நாட்களில் ஒரு நாளைக்கு $1 மில்லியன் வசூல் செய்து ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது.

    வசூல் அதிகரிக்கும்

    வசூல் அதிகரிக்கும்

    இன்றும், நாளையும் விடுமுறை தினம் என்பதால் முதல் வார இறுதி நாள் வசூல் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மட்டுமல்லாது உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் இப்படத்திற்கான வரவேற்பு அதிகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால் படக்குழுவினர் மட்டுமில்லாது பொன்னியின் செல்வன் பிரியர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    ponniyin Selvan day 2 Box Office Collection : film crosses rs150 crore world wide
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X