ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே பிரம்மாண்ட சாதனையை துவங்கிய பொன்னியின் செல்வன்

சென்னை : பொன்னியின் செல்வன் படம் தனது ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே இதுவரை எந்த ஒரு படமும் பார்க்காத மிக அதிகமான தொகைக்கு விற்பனையாகி தனது சாதனை மற்றும் பிரம்மாண்ட வசூல் சாதனையையும் துவக்கி உள்ளது.

2022 ம் ஆண்டில் தமிழ் சினிமா அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருகின்றன. தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்த நிலை என ஒரு புறம் ரசிகர்கள் புலம்பிக் கொண்டிருந்தாலும், மற்றொரு புறம் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் கமலின் விக்ரம், டைரக்டர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உள்ளன.

பொன்னியின் செல்வன் ரிலீஸ்

பொன்னியின் செல்வன் ரிலீஸ்

இதில் மணிரத்னத்தின் கனவு படமும், மிகப் பெரிய வரலாற்று காவியமுமான பொன்னியின் செல்வன் கல்வி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இசைப்புயலின் 16வது படம்

இசைப்புயலின் 16வது படம்

இந்திய திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 16வது படம் இதுவாகும்.

டீசர் ரிலீஸ் எப்போ

டீசர் ரிலீஸ் எப்போ

பெரிய பட்ஜெட்டில் உருக்கப்பட்ட தமிழ் படங்களில் இதுவும் ஒன்று. பான் இந்தியன் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. போஸ்ட் ப்ரொடக்ஷனில் தற்போது VFX பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். முழுவீச்சில் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெறுவதால் படத்தின் பிரம்மாண்டமான டீசரை முக்கியமான நாள் ஒன்றில் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

செம வியாபாரமா இருக்கு

செம வியாபாரமா இருக்கு

இதற்கிடையில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் அமோகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் தியேட்டர் ரிலீசிற்கு பிந்தைய டிஜிட்டல் உரிமம் மிகப் பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளதாம். முதல் பாகம் மட்டுமல்ல இரண்டு பாகங்களின் டிஜிட்டல் உரிமமும் தலா ரூ.125 கோடி வரை விற்பனை செய்ய செய்யப்பட்டுள்ளதாம். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களின் டிஜிட்டல் உரிமத்தை மிகவும் பிரபலமான ஒரு ஓடிடி தளம் வாங்கி உள்ளதாம்.

இவங்க தான் வாங்கிருக்காங்களா

இவங்க தான் வாங்கிருக்காங்களா

இதற்கு முன் சூர்யாவின் அதிகமான படங்களை இந்த தளம் வெளியிட்டுள்ளதாம் ஒரு க்ளூ வேறு வெளியாகி உள்ளது. அதனால் இது அமேசான் பிரைம் வீடியோவாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சன் நெக்ஸ்ட் நிறுவனமும் இதனை வாங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தியேட்டரில் ரிலீசாவதற்கு முன்பே டிஜிட்டல் வெளியிட்டை பொன்னியின் செல்வன் உறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X