அடுத்த மாஸ் ரெடி...பொன்னியின் செல்வனுக்கு இப்படி ஒரு அசத்தல் பிளானா?
சென்னை : பொன்னியின் செல்வன் படத்திற்காக பிரம்மாண்ட பிளான் ஒன்றை படக்குழு ரெடி செய்துள்ளது. இது பற்றிய தகவல்கள் வெளியாகி செம டிரெண்டாகி வருகிறது.
டைரக்டர் மணிரத்னத்தின் கனவு படமாக உருவாக்கப்பட்டுள்ளது பொன்னியின் செல்வன். இந்திய திரையுலகின் பிரபலமான நடிகர், நடிகைகள் நடித்துள்ள இந்த படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் அடுத்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

முதல் பாகம் ரிலீசுக்கு ரெடி
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. லைகா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

முதல் மெகா பட்ஜெட் படம்
படத்தின் அவுட்புட் ஏறக்குறைய தயாராகி விட்டதாம். இதனால் படத்தின் ரிலீஸ், ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு இப்போதே துவங்க திட்டமிட்டுள்ளது. தமிழில் அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட முதல் படமாக கருதப்படும் பொன்னியின் செல்வன் படத்தின் விநியோக உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வாங்கி உள்ளது.

பொன்னியின் செல்வன் டீசர்
ரிலீசிற்கான முதல் படியாக, வரும் ஜுலை மாதம் பொன்னியின் செல்வன் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அசத்தலாக டீசர் தயாராகி வருகிறதாம். டீசர் வெளியீட்டு விழாவுடன் செய்தியாளர் சந்திப்பையும் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பை படத்தின் முக்கிய கதைக்களமான தஞ்சாவூரில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம். டீசர் வெளியீட்டு விழாவும் தஞ்சையில் தான் நடத்தப்பட உள்ளதாம்.

டிரெண்டிங்கில் அசத்துதே
பான் இந்தியன் படம், காவியப்படம், பெரிய ஸ்டார்கள் நடித்துள்ள படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஃபைனல் காப்பியும் ரெடியாகி விட்டதாம். டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் டீசர் பற்றிய தகவல் காரணமாக #PonniyinSelvan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











