பொன்னியின் செல்வன் பார்க்க சென்னை வந்த ஐஸ்வர்யா ராய்… விக்ரம், கார்த்தியுடன் க்யூட் செல்ஃபி

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,.

முதல் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பி வருகிறது பொன்னியின் செல்வன்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படம் பார்ப்பதற்காக மும்பையில் இருந்து சென்னை பறந்துவந்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

பாக்ஸ் ஆபிஸில் மாஸ்

பாக்ஸ் ஆபிஸில் மாஸ்

கோலிவுட்டின் மிகப் பெரிய கனவுப் படமான பொன்னியின் செல்வன், மணிரத்னத்தின் விடா முயற்சியில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ் என 30க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில், உலகம் முழுவதும் பான் இந்தியா படமாக வெளியான பொன்னியின் செல்வன், முதல் மூன்று நாட்களில் 230 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நந்தினியும் குந்தவையும்

நந்தினியும் குந்தவையும்

விக்ரம் ஆதித்த கரிகாலன் கேரக்டரிலும், கார்த்தி வந்தியத்தேவன் பாத்திரத்திலும், ஜெயம் ரவி அருள்மொழிவர்மனாகவும் நடித்துள்ளனர். அதேபோல், ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், திரிஷா குந்தவையாகவும் எதிரும் புதிருமாக நடித்து மாஸ் காட்டியுள்ளனர். படத்தில் இருவரும் சந்திக்கும் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குந்தவையின் சூழ்ச்சியும், நந்தினியின் நயவஞ்சகமும் படத்தில் பார்ப்பதற்கு சிலிர்ப்பை தருவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். தமிழ் சினிமாவின் சிறப்பான படைப்பாக பொன்னியின் செல்வன் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னையில் ஐஸ்வர்யா ராய்

சென்னையில் ஐஸ்வர்யா ராய்

உலகம் முழுவதும் இந்தப் படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதால் வரும் நாட்களில் பொன்னியின் செல்வன் கலெக்‌ஷன் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படம் வெளியீட்டுக்கு முன்னர் மும்பையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மட்டும் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டார். சென்னை, கொச்சி, ஐதராபாத் ப்ரோமோஷனில் ஐஸ்வர்யா ராய் பங்கேற்கவில்லை. இந்நிலையில், மும்பையில் இருந்து சென்னை வந்துள்ள ஐஸ்வர்யா ராய், படக்குழுவினருடன் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

விக்ரம், கார்த்தியுடன் செல்ஃபி

விக்ரம், கார்த்தியுடன் செல்ஃபி

சென்னை சத்யம் சினிமாஸில் ஐஸ்வர்யா ராய்க்காக நடைபெற்ற ஸ்பெஷல் திரையிடலில், இயக்குநர் மணிரத்னம், சுஹாசினி, திரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உட்பட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர். படம் பார்த்த பின்னர் விக்ரம், கார்த்தியுடன் ஐஸ்வர்யா ராய் எடுத்துக்கொண்ட செல்ஃபி இப்போது வைரலாகி வருகிறது. அதேபோல், பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் ஐஸ்வர்யா ராய் போட்டோஸ் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படங்கள் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X