பொன்னியின் செல்வன் படவிழா தஞ்சையில் கிடையாதா...கோலிவுட்டையும் துரத்தும் கோயில் சென்டிமென்ட்
சென்னை : இந்திய சினிமாவே அதிகம் எதிர்பார்க்கும் வரலாற்று காவியமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன். மணிரத்னத்தின் கனவு படமாக உருவாகி உள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
Recommended Video
இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கான ப்ரொமோஷன் வேலைகளை படக்குழு ஏற்கனவே துவங்கி விட்டது.
சமீபத்தில் வருகிறான் சோழன் என்ற கேப்ஷனுடன் மோஷன் போஸ்டரை வெளியிட்ட படக்குழு, நேற்று விக்ரம் நடித்துள்ள ஆதித்ய கரிகாலன் கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டது. குதிரை மீது அமர்ந்தது போன்ற விக்ரமின் போஸ்டர் ,லைக்குகளை அள்ளியது.

வந்தியதேவன் எப்போ வருவார்
இதனால் அடுத்து என்ன வெளியிட போகிறார்கள், யாருடைய போஸ்டரை படக்குழு வெளியிட உள்ளது, கார்த்தி நடித்துள்ள வந்தியத்தேவன் கேரக்டரின் போஸ்டர் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். ரிலீஸ் தேதி கன்ஃபார்ம் ஆகி விட்டதால் டீசரை எப்போ வெளியிட போகிறார்கள் என அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

டீசர் ரிலீஸ் பற்றி சொல்லலியே
ஜுலை முதல் வாரத்திலேயே டீசர் வெளியிடப்பட உள்ளதாகவும், இதற்கான விழா தஞ்சையில் நடத்தப்பட உள்ளதாகவும் முதலில் தகவல் பரவியது. பிறகு கிராஃபிக்ஸ் பணிகள் மீதமுள்ளதால் ஜுலை மாத இறுதிக்கு டீசர் வெளியீட்டு விழா தள்ளி வைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் படக்குழு சார்பில் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இதுதான் பிளானா
லேட்டஸ்ட் தகவலின்படி, ஜுலை முதல் வாரத்தில் தஞ்சை பெரிய கோயிலில் வைத்து பிரம்மாண்ட விழாவாக பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழா நடத்த தான் படக்குழு பிளான் செய்ததாம். இதற்காக தான் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் கால்ஷீட் பெறப்பட்டதாம். இந்த விழாவில் பங்கேற்க பல விஐபி.,க்களையும் அழைத்திருந்தார்களாம்.

பிளான் மாற இது தான் காரணமா
ஆனால் தஞ்சை பெரிய கோயிலுக்கென்று பல காலமாக ஒரு சென்டிமென்ட் உள்ளது. அதாவது பெரிய பதவிகளில் இருப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்றால் அவர்களின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு விடும் என்பது தான் அது. ஒரு குறிப்பிட்ட திசை நுழைவு வாயில் வழியாக செல்ல தவிர்ப்பதற்கும் இது தான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதுவரை அரசியல் பிரமுகர்கள் தான் இந்த சென்டிமென்டிற்கு பயந்து தஞ்சை கோயில் பக்கமே தலைகாட்டாமல் இருந்தனர்.

தஞ்சையில் விழா கிடையாதா
இந்நிலையில் தற்போது கோலிவுட்டையும் தஞ்சை கோயில் சென்டிமென்ட் அசைத்து பார்த்துள்ளதாம். சென்டிமென்ட காரணமாக பொன்னியின் செல்வன் படவிழாவில் கலந்து கொள்ள பலரும் தயக்கம் காட்டினார்களாம். அதனால் வேறு வழியில்லாமல் தற்போது தஞ்சையில் நடத்த திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் பட விழாவை சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், அழைப்பிதழ்கள் குட தயாராகி விட்டதாகவும் குறப்படுகிறது.

ரஜினி, கமல் வராங்களா
இந்த விழாவிற்காக ரஜினி, கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். அவர்களும் விழாவிற்கு வர ஓகே சொல்லி விட்டார்களாம். விரைவில் பொன்னியின் செல்வன் பட விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளதாம். இந்த விழாவில் டீசர் உள்ளிட்ட பல விஷயங்கள் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஐபி.,க்கள் லிஸ்ட் முடிவானதும் தேதியும் அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











