twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்காவில் மட்டும் 50 கோடி வசூல்.. இந்த ஞாயிறுடன் 500 கோடி வசூலை நெருங்குமா பொன்னியின் செல்வன்?

    |

    சென்னை: சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பல பிரபல நடிகர்கள் நடிப்பில் கல்கியின் பொன்னியின் செல்வனை கண் முன்னே காட்டினார் இயக்குநர் மணிரத்னம்.

    செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் 15 நாட்களிலேயே 450 கோடியை நெருங்கி இமாலய சாதனையை படைத்துள்ளது.

    கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் 450 கோடி வசூலையும் பொன்னியின் செல்வன் இந்த வார இறுதியில் தாண்ட உள்ளதாக கூறுகின்றனர்.

    கமலின் விக்ரம் பட பாணியில் வாரிசு ப்ரோமோஷன்… துபாய் பறக்க விஜய் முடிவுகமலின் விக்ரம் பட பாணியில் வாரிசு ப்ரோமோஷன்… துபாய் பறக்க விஜய் முடிவு

    விக்ரம் வசூல் முறியடியக்கப்படும்

    விக்ரம் வசூல் முறியடியக்கப்படும்

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் 100 நாட்கள் தியேட்டரில் ஓடிய நிலையில், ஒட்டுமொத்தமாக 450 கோடி வசூல் ஈட்டியது. ஆனால், பொன்னியின் செல்வன் வெறும் 16 நாட்களிலேயே அதி வேகமாக அந்த வசூல் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைக்கப்போவது உறுதியாகி உள்ளது.

    தமிழ்நாட்டில் முதலிடம்

    தமிழ்நாட்டில் முதலிடம்

    தமிழ்நாட்டிலும் அதிக வசூலை ஈட்டி முதலிடத்தில் இருந்த கமல்ஹாசனின் விக்ரம் படத்தை முந்தியுள்ளது இயக்குநர் மணிரத்னத்தின் சோழர் புகழ் பாடிய பொன்னியின் செல்வன். தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பாகுபலி என ரசிகர்கள் ஒற்றுமையுடன் இருந்து உலகம் முழுவதும் கொண்டாடியது தான் இப்படியொரு சாதனையை அந்த படம் படைக்க காரணமாக அமைந்தது என திரைத்துறையில் பெருமையாக பேசிக் கொள்கின்றனர்.

    அமெரிக்காவில் 50 கோடி

    அமெரிக்காவில் 50 கோடி

    இதுவரை எந்தவொரு தமிழ் சினிமாவும் செய்யாத சாதனையாக அமெரிக்காவில் அதிகபட்சமாக 50 கோடி ரூபாய் வசூலை பொன்னியின் செல்வன் திரைப்படம் ஈட்டி உள்ளது. சர்வதேச அளவில் திரையிட்ட இடங்களில் எல்லாம் மிகப்பெரிய வசூல் வேட்டை வந்த நிலையில், ரஜினிகாந்தின் அமெரிக்கா மற்றும் ஓவர்சீஸ் ரெக்கார்டுகளை இந்த படம் ஓவர்டேக் செய்து சாதனை படைத்துள்ளது.

    500 கோடி விரைவில்

    500 கோடி விரைவில்

    ஆதித்த கரிகாலனையும், அருள்மொழி வர்மனையும், வந்தியத்தேவனையும், குந்தவையையும், நந்தினியையும் பார்க்க இதுவரை மக்கள் 400 கோடி ரூபாயை பொன்னியின் செல்வன் படத்துக்காக செலவு செய்துள்ளனர் என லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதுவரை 435 கோடி வசூல் செய்துள்ள பொன்னியின் செல்வன் இந்த வார இறுதிக்குள் 465 கோடி முதல் 470 கோடி வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவிலேயே 500 கோடியை கடந்து சோழர்களின் கொடியை சர்வதேச அளவில் பறக்கவிடும் என்பதும் கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

    2ம் பாகம் வசூல்

    2ம் பாகம் வசூல்

    பொன்னியின் செல்வன் முதல் பாகமே 500 முதல் 600 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் 2ம் பாகம் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியானால் நிச்சயம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக மாறும் என்றும் படக்குழுவினர் உறுதியாக நம்பி அதற்கு ஏற்றவாறு போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை இன்னமும் சிறப்பாக பார்த்து மெருகேற்றி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    English summary
    Ponniyin Selvan expected to reach 500 crore rupees in a couple of days. Mani Ratnam's epic saga movie Ponniyin Selvan part 1 done a huge box office hit at the all over the world. It beat Rajinikanth's overseas records too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X