Don't Miss!
- News
ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Finance
அதானி குழுமத்திற்கு ஜாக்பாட் நியூஸ்.. அபுதாபி நிறுவனம் ரூ.3200 கோடி முதலீடு செய்ய திட்டம் !
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஆத்தாடி.. சட்டையை தூக்கி 8பேக் காட்டிய ஹ்ரித்திக் ரோஷன்.. கண்ணு வச்ச பிகினி பேபி!
மும்பை: சிக்ஸ்பேக் எல்லாம் தாண்டி பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், ஹ்ரித்திக் ரோஷன் எல்லாம் 8பேக் உடன் போட்டோ போட்டு இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு செம டஃப் கொடுத்து வருகின்றனர்.
வயதுக்கு வந்த மகன்களுக்கு இணையாக 50 வயதை நெருங்கும் ஹ்ரித்திக் ரோஷனும் நடிகை சபா ஆசாத் உடன் ஜோடி போட்டு சுற்றி வருகிறார்.
இந்நிலையில், 2023ஐ எதிர்கொள்ள இந்த உடம்பு எப்படி இருக்கு என சட்டையை தூக்கி தனது 8பேக் உடம்பை ஹ்ரித்திக் ரோஷன் காட்டிய நிலையில், பிகினி பேபியான பூஜா பலேக்கர் போட்ட ட்வீட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
சிக்ஸ்பேக்
புகைப்படத்தை
பதிவிட்ட
மாஸ்டர்
மகேந்திரன்..
உள்ளாடை
குறித்தகமெண்ட்டுக்கு
செம
ரிப்ளை!

ஹேண்ட்ஸம் ஹன்க்
தூமசாலா என தூம் 2 படத்தில் சட்டையை கழட்டி விட்டு எப்படி ஆட்டம் போட்டாரோ ஹ்ரித்திக் ரோஷன் இன்னமும் அதே பாடியை அப்படியே மெயின்டெயின் செய்து வருகிறார். நடனத்திலும், நடிப்பிலும் இந்திய சினிமாவிலேயே ஹேண்ட்ஸம் ஹங்க் என்றால் அது ஹ்ரித்திக் ரோஷன் தான் என ஏகப்பட்ட பிரபலங்களே பாராட்டி உள்ளனர். வார் திரைப்படம் 400 கோடி வசூலை அள்ளிய நிலையில், விக்ரம் வேதா திரைப்படம் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை.

விக்ரம் வேதா ரீமேக்
ஷாருக்கானின் பதான் படத்தை இயக்கிய இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹ்ரித்திக் ரோஷன், டைகர் ஷெராஃப் நடித்த வார் திரைப்படம் 400 கோடி வசூலை அள்ளி பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால், புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா பாலிவுட்டில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை அள்ளவில்லை.

49 வயதில் காதல்
டிவி மற்றும் வெப்சீரிஸில் செம ஹாட்டாக நடித்து வரும் பாலிவுட்டின் இளம் நடிகை சபா ஆசாத்தை காதலித்து வருகிறார் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். கடந்த 2000ம் ஆண்டு நடிகை சுசேன் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளுக்கு அப்பாவான ஹ்ரித்திக் ரோஷன் 2014ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார். கங்கனா ரனாவத்தை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என தகவல்கள் வெளியான நிலையில், இருவருக்கும் இடையே பெரிய சண்டை வெடித்தது பலரையும் ஷாக் ஆக்கியது.

8 பேக்
பதான் படத்திற்காக ஷாருக்கான் 8பேக் வைத்த நிலையில், நானும் வச்சிக் காட்டுறேன் என ஹ்ரித்திக் ரோஷனும் 8 பேக் உடன் இருக்கும் போட்டோக்களை தற்போது இணையத்தில் வெளியிட்டு "Alright. Let's go. #2023" என கேப்ஷன் கொடுத்துள்ளார் ஹ்ரித்திக் ரோஷன்.

பிரமித்த ஃபேன்ஸ்
மனுஷன் இந்த வயசிலும் இப்படி ஹேண்ட்ஸம் ஹங்காக இருக்காரே என பாலிவுட் ரசிகர்கள் எல்லாம் ஹ்ரித்திக் ரோஷனின் 8 பேக்ஸை பார்த்து பிரம்மித்துப் போய் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். நெட்பிளிக்ஸின் வெப்சீரிஸ், ஃபைட்டர் உள்ளிட்ட படங்கள் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கண் வைத்த பூஜா பலேக்கர்
ராம் கோபால் வர்மா இயக்கிய லட்கி படத்தில் ஹீரோயினாக நடித்த பிகினி பேபி பூஜா பலேக்கர் ஹ்ரித்திக் ரோஷனின் இந்த போட்டோக்களை பார்த்ததும் அப்படியே ஷாக் ஆகிப் போய் கண் வைத்து கமெண்ட் போட்டுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.