சியானுடன் செல்ஃபி...மணிரத்னத்தை கூலாக்க உஷாராக பிரபல வில்லன் செய்த பலே காரியம்

சென்னை : விக்ரம் சமீபத்தில் தான் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் மகான் என பெயரிடப்பட்டுள்ள சியான் 60 படத்தின் ஷுட்டிங் வேலைகளை நிறைவு செய்தார். இதைத் தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு பாகங்களாக தயாரிக்கப்பட்டு வரும் இந்த படம், தமிழில் இதுவரை வெளிவராத அளவிற்கு மிக காஸ்ட்லியாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. மணிரத்னத்தின் கனவு படமாக மெகா ஸ்டார்கள் அதிகமானவர்கள் நடிக்கும் முதல் தமிழ் படமாக உருவாகி வருகிறது.

வந்தியதேவனாக கார்த்தி

வந்தியதேவனாக கார்த்தி

வரலாற்று படமான பொன்னியின் செல்வன் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஜெயம் ரவியும் சமீபத்தில் இரண்டு பாகங்களிலும் தனது போர்ஷனை முடித்து விட்டதாக ட்வீ ட் செய்திருந்தார். இதற்கு பதில் ட்வீட் செய்த கார்த்தி, தான் வந்தியதேவன் கேரக்டரில் தான் நடிக்கிறேன் என்பதை உறுதி செய்து விட்டார்.

டென்ஷன் ஆன மணிரத்னம்

டென்ஷன் ஆன மணிரத்னம்

ஏற்கனவே பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராயின் தோற்றம் பற்றிய ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோ லீக்கானதால் செம டெக்ஷன் ஆகி, அப்செட்டில் இருந்து வருகிறார் மணிரத்னம். இனி ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

செல்ஃபியை பகிர்ந்த வில்லன்

செல்ஃபியை பகிர்ந்த வில்லன்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வரும் 90 களில் பிரபல வில்லனாக இருந்த பாபு ஆன்டனி, விக்ரமுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஃபோட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். விக்ரம் மட்டுமல்ல ஐஸ்வர்ய லட்சுமியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியையும் பாபு ஆன்டனி பகிர்ந்துள்ளார்.

அவர் தானா இவர்

அவர் தானா இவர்

இவர் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். 80 மற்றும் 90 களில் சரத்குமார் நடித்த சூரியன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். விண்ணை தாண்டி வருவாயா படத்தில் ஜெசியின் அப்பாவாகவும், லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தில் அக்பர் பாயாகவும் நடித்துள்ளார்.

வரிசையாக செல்ஃபி

வரிசையாக செல்ஃபி

தற்போது பொன்னியின் செல்வனில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பாபு ஆன்டனி, ஆகஸ்ட் 25 ம் தேதி பூங்குழலியாக நடிக்கும் ஐஸ்வர்ய லட்சுமியுடன் எடுத்த செல்ஃபியையும், ஆகஸ்ட் 27 ம் தேதி விக்ரமுடன் எடுத்த செல்ஃபியையும் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

உஷாரான ஆளு தான்

உஷாரான ஆளு தான்

பாபு, தற்போது குவாலியரில் நடைபெற்று வரும் ஷுட்டிங்கில் தான் கலந்து கொண்டுள்ளார். விக்ரமுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோவுடன், மீண்டும் விக்ரமுடன் சிறப்பான சந்திப்பு. நாங்கள் நீண்ட காலத்திற்கு முன் மாஃபியா, ஸ்ட்ரீட் என பலவற்றில் பணியாற்றி உள்ளோம். நாங்கள் ஷுட்டிங் ஸ்பாட்டில் ஃபோட்டோ எடுக்கவில்லை. காஸ்ட்யூமில் இருக்கும் போதும் எடுக்கவில்லை.

விக்ரம் மாறவேயில்லை

விக்ரம் மாறவேயில்லை

நேற்று விக்ரம் எனது ரூமிற்கு வந்தார். அப்போது நாங்கள் இந்த செல்ஃபியை எடுத்தோம். விக்ரம் அதே கனிவு, அக்கறையுடன் இப்போதும் உள்ளார் என கருத்து பதிவிட்டுள்ளார் பாபு ஆன்டனி. மணிரத்னம் கோபப்பட்டு விடக் கூடாது என்பதற்காக மிக உஷாராக இந்த கேப்ஷனை அவர் பதிவிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு ரிலீஸ்

அடுத்த ஆண்டு ரிலீஸ்

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் வேலைகளையும் 75 சதவீதம் முடித்து விட்டார்களாம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாகத்தை 2022 ம் ஆண்டின் துவக்கத்திலும், இரண்டாம் பாகத்தை 2022 ன் இறுதியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X