தளபதி 66 டைரக்டர் இவர் தான்...அச்சச்சோ உளறிட்டனே...பதறி போன இசை பிரபலம்

சென்னை : விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

போராடும் சிறுவன்.. சாப்பிடவும் முடியாமல், மூச்சு விடவும் முடியாமல்.. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு தயாராகி வருகிறது. பீஸ்ட் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் இப்போதே துவங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா விஜய்

தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா விஜய்

அதற்குள் விஜய்யின் அடுத்தப்படம் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. லேட்டஸ்ட் தகவலின்படி, விஜய் அடுத்து நடிக்க உள்ள படம் நேரடி தெலுங்கு படமாம். இது விஜய் தெலுங்கில் அறிமுகமாகும் படமாம்.

தளபதி 66 அப்டேட் இது தானா

தளபதி 66 அப்டேட் இது தானா

தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை மகரிஷி படத்தை இயக்கிய முன்னணி தெலுங்கு டைரக்டர் வம்ஷி பைடிபல்லி இயக்குகிறாராம். சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் இந்த தகவல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

வம்ஷிக்கு குவிந்த வாழ்த்துக்கள்

வம்ஷிக்கு குவிந்த வாழ்த்துக்கள்

இந்நிலையில் டைரக்டர் வம்ஷியின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்படி பிரபல பாடகர், நடிகர், இசையமைப்பாளரான கிருஷும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Recommended Video

Soundarya Rajinikanth - Vishagan வாங்கிய புது வீடு | ECR | Tamil Filmibeat
அச்சச்சோ உளறிட்டேனே

அச்சச்சோ உளறிட்டேனே

தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ள கிருஷ், எனக்கு பிடித்த நபர்களில் ஒருவரும், டைரக்டருமான வம்ஷிக்கு ஹேப்பி ஹேப்பி பர்த்டே. இது அற்புதமான வருடமாக அமையும் நண்பா...காத்திருக்கிறேன். அடுத்த படம் விஜய் அண்ணாவுடன் பண்ண வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

பதிவை அவசரமாக நீக்கிய கிருஷ்

பதிவை அவசரமாக நீக்கிய கிருஷ்

ஆனால் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே இந்த ட்வீட்டை நீக்கி விட்டார் கிருஷ். ஆனால் எதற்காக கிருஷ் இந்த பதிவை நீக்கினார் என தெரியவில்லை. இருந்தாலும் கிருஷ் பதிவிட்ட உடனேயே அதை ஸ்கிரீன் ஷாட் போட்டு விட்ட நெட்டிசன்கள், வைரலாக்கி வருகின்றனர். இந்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X