»   »  தயாரிப்பாளர் திருப்பூர் மணி மரணம்... சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தியவர்

தயாரிப்பாளர் திருப்பூர் மணி மரணம்... சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தியவர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்த் திரையுலகின் பழம்பெரும் தயாரிப்பாளர் திருப்பூர் மணி காலமானார். அவருக்கு வயது 76.

விவேகானந்தா பிக்சர்ஸ் பேனரில் ரோசாப்பூ ரவிக்கைக்காரி, வண்டிச் சக்கரம், சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கைச் சக்கரம், இமைகள், வண்டிச்சோலை சின்ராசு உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் திருப்பூர் மணி.

Popular producer Tirupur Mani passes away

உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார் திருப்பூர் மணி. சத்யராஜின் திரையுலக வாழ்வில் முக்கிய இடம் பிடித்தவர். சத்யராஜ் நடித்த பல படங்களை திருப்பூர் மணி தயாரித்துள்ளார். நடிகை சில்க் ஸ்மிதாவை தனது வண்டிச் சக்கரம் படத்தில் அறிமுகப்படுத்தியவர் திருப்பூர் மணி.

திருப்பூர் மணிக்கு நாளை இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருப்பூர் மணியின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

Read more about: producer, death, மரணம்
English summary
Popular Producer Tirupur Mani was passed away today at his Chennai residence.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil