'வாரிசு'ஷுட்டிங்கில் அசிங்கப்பட்டேன்...நொந்துபோய் பேட்டியளித்த பிரபல சீரியல் நடிகர்

சென்னை : 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பிற்கு வர சொல்லி தன்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள் என பிரபல நடிகர் ஒருவர் நொந்துபோய் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Recommended Video

Thalapathy Vijay | அடுத்த படத்தின் Title இதுதானா? வெறித்தனமா இருக்கே! *Kollywood

டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் ஷுட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, விசாகப்பட்டினம், ஐதராபாத் என பல இடங்களில் ஷுட்டிங் நடத்தப்பட்டுள்ளது.

குடும்ப பொழுதுபோக்கு, ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறது. சமீபத்தில் தான் ஐதராபாத்தில் இருந்து விஜய் சென்னைக்கு வந்ததாகவும், விரைவில் அடுத்த கட்ட ஷுட்டிங் துவங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

வாரிசு பட வாய்ப்பு

வாரிசு பட வாய்ப்பு

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் ஜெகநாதன் கேரக்டரில் நடித்து வரும் ரவிச்சந்திரனிடம் ஐந்து நாள் கால்ஷீட் கேட்டுள்ளனர். அவரும் விஜய் படம் என்று மகிழ்ச்சியாக படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

ரிஜக்ட் செய்த டைரக்டர்

ரிஜக்ட் செய்த டைரக்டர்

படப்பிடிப்பின்போது மேக்கப் எல்லாம் போட்ட பிறகு திடீரென தனது உதவியாளரை அழைத்த வம்சி,அவரை போகச் சொல்லுங்கள், அவர் பார்ப்பதற்கு ரிச்சாக இருக்கின்றார்.இந்த கேரக்டருக்கு சரிவர மாட்டார் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இதனை உதவி இயக்குனர் தயங்கிக்கொண்டே ரவிசந்திரனிடம் கூறி உள்ளார்.

நொந்து போன நடிகர்

நொந்து போன நடிகர்

மிகவும் அதிர்ச்சி அடைந்த ரவிச்சந்திரன், தன்னை இந்த கேரக்டருக்கு அழைத்தபோது தான் ரிச்சாக இருப்பது தெரியவில்லையா? இப்படி படப்பிடிப்புக்கு அழைத்து, மேக்கப் எல்லாம் போட்ட பின்னர் வேண்டாம் என்று கூறி அசிங்கப்படுத்துவதா? என்று நொந்துபோய் ஷுட்டிங் ஸ்பாட்டை விட்டில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.

விஜய்யிடம் சொல்லி இருக்கலாம்

விஜய்யிடம் சொல்லி இருக்கலாம்

அப்போது விஜய்யை சந்தித்து இதைக்கூற வேண்டும் என்று திட்டமிட்ட போது அவரை அழைத்து வந்த மேனேஜர் விஜய்யிடம் எல்லாம் இதைச் சொல்ல வேண்டாம்.உங்களுக்கு இன்றைய நாள் சம்பளம் வந்துவிடும் என்று கெஞ்சி கேட்டு கொண்டதால் வருத்தத்துடன் வீடு திரும்பிவிட்டேன் என்று ரவிச்சந்திரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X