தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா...இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா ?

சென்னை : நடிகர் தனுஷும், அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யாயும் ஜனவரி 17ம் தேதியன்று தாங்கள் பிரிய போவதாக அறிவித்தனர். திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு பிரிய போவதாக முடிவு செய்திருப்பதாக இருவரும் தங்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் அறிவித்தனர்.

Recommended Video

Dhanush & Aishwarya Rajinikanth Love Story | முதல் சந்தீப்பு, Kadhal Konden

இது பற்றி பல தகவல்கள் வெளியாகி, மீடியா, சோஷியல் மீடியா என அனைத்தும் பரபரப்பாகின. இவர்கள் இருவரும் தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ரசிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஐதராபாத்தில் ஐஸ்வர்யா

ஐதராபாத்தில் ஐஸ்வர்யா

தனுஷை பிரிவதாக அறிவித்த ஐஸ்வர்யா, தற்போது சென்னையில் இல்லை. ஐதராபாத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது பற்றி விசாரித்த போது, பிரிவை அறிவித்த பிறகு அவர் மீண்டும் தனது வேலைகளில் கவனம் செலுத்த துவங்கி விட்டாராம். அந்த வேலைகளுக்காக தான் ஐஸ்வர்யா ஐதராபாத்தில் தங்கி இருக்கிறாராம்.

இது தான் காரணமா

இது தான் காரணமா

தனுஷ் நடித்த 3 உள்ளிட்ட சில படங்களை இயக்கி உள்ள ஐஸ்வர்யா தற்போது மீண்டும் டைரக்ஷனுக்கு திரும்பி உள்ளாராம். லேட்டஸ்ட் தகவலின்படி காதலர் தினத்திற்காக ரொமான்டிக் பாடல் ஒன்றை இயக்கி வருகிறாராம் ஐஸ்வர்யா. இதற்கான ஷுட்டிங் ஜனவரி 25ம் தேதி துவங்கி 27ம் தேதி நிறைவடைய உள்ளதாம்.

பிரபல நடிகையின் மகள்

பிரபல நடிகையின் மகள்

மூன்று நாட்கள் தொடர்ந்து நடக்க உள்ள ஷுட்டிங்கிற்கான வேலைகளை ஐஸ்வர்யா இப்போதே துவக்கி விட்டாராம். இந்த காதலர் தின ஸ்பெஷல் ரொமான்டிக் பாடலில் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த பிரபல நடிகை ஒருவரின் மகள் நடிக்க போகிறாராம். அதே போல் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அவருக்கு ஜோடியாக நடிக்க போகிறாராம்.

அடுத்த கொலவெறி சாங்கா

அடுத்த கொலவெறி சாங்கா

ஐஸ்வர்யா இயக்கிய முதல் படமான 3 படத்தில் அனிருத் இசையில் அமைந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் பலரையும் கவர்ந்தது. யூட்யூப்பில் இந்த பாடல் மிகப் பெரிய சாதனை படைத்தது. சிறியவர், இளைஞர், வெளிநாட்டினர் என பாகுபாடு இல்லாமல் பலரும் இந்த பாடலை பாடினர். பலர் இந்த பாடலை ரீமேக் செய்து வெளியிட்ட வீடியோக்களும் செம ஹிட் ஆனது. அதனால் தற்போது ஐஸ்வர்யா இயக்கும் இந்த பாடலும் செம ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X