பிரபாஸ் பிறந்தநாள்.. தியேட்டரில் வெளியான பில்லா.. அனுஷ்கா பிகினி சீனுக்கு அப்படியொரு கொண்டாட்டம்!

ஹைதராபாத்: நடிகர் பிரபாஸின் 43வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆதிபுருஷ் படத்தில் இருந்து புதிய போஸ்டரும், ப்ராஜெக்ட் கே படத்தின் பிரத்யேக சூப்பர் ஹீரோ கை போஸ்டரும் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு தியேட்டரில் பில்லா திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியான நிலையில், அதில் வரும் அனுஷ்காவின் அந்த காட்சியை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துள்ள வீடியோ க்ளிப்புகளும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

சென்னை பையன்

சென்னை பையன்

டோலிவுட்டின் பல இளம் ஹீரோக்கள் சென்னையில் தான் பிறந்தவர்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். நடிகர் பிரபாஸும் சென்னையில் தான் 1979ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி பிறந்தார். இன்று தனது 43வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். பிரபாஸ் நடிப்பில் 3 பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில், ஒவ்வொரு படங்களின் அசத்தல் அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

ஆதிபுருஷ் போஸ்டர்

ஆதிபுருஷ் போஸ்டர்

நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள ஆதிபுருஷ் படத்தின் அசத்தலான போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அனிமேஷன் படம் என்பதே தெரியாதது போல பிரபாஸ் முகம் அப்படியே ரியாலிட்டியுடன் ஒத்துப் போவது போல இந்த புதிய ராமர் போஸ்டர் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய இயக்குநர் நாக வம்சி இயக்கத்தில் அடுத்ததாக பிரபாஸ் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு ப்ராஜெக்ட் கே என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சூப்பர் ஹீரோ கையுடன் ஒரு சூப்பரான போஸ்டரை படக்குழுவினர் பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பில்லா பிகினி சீன்

பில்லா பிகினி சீன்

பிரபாஸ் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திராவில் ஒரு பிரபல தியேட்டரில் பில்லா படத்தின் சிறப்பு காட்சியை திரையிட்டுள்ளனர். இந்நிலையில், அந்த படத்தில் அனுஷ்கா பிகினி உடையில் வரும் உச்சகட்ட கவர்ச்சி காட்சியை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடி வரும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர்.

 அனுஷ்காவுக்கு ஆரவாரம்

அனுஷ்காவுக்கு ஆரவாரம்

பிறந்தநாள் என்னவோ பிரபாஸுக்கு ஆனால், படத்தில் அனுஷ்கா அப்படி டூபீஸில் நடந்து வந்ததை பார்த்ததும் ரசிகர்கள் கலர் பேப்பர்களையும் சில்லரைகளையும் சிதற விட்டு அந்த காட்சியை ரசித்துள்ளனர். எப்படி இருந்த அனுஷ்கா இப்போ இப்படி மாறிட்டாரே, பிரபாஸுக்கு சரியான ஜோடி அனுஷ்கா தான் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

தெறிக்குது

தெறிக்குது

பிரபாஸ் நீச்சல் குளத்தில் இருக்க, இடுப்பில் பில்லா என்கிற டாட்டூவுடன் பிகினி உடையில் நடந்து வரும் அனுஷ்கா நீச்சல் குளத்தில் அப்படியொரு கோலத்தில் இறங்கும் காட்சிக்கு தியேட்டரில் இருந்த அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று கலர் பேப்பர்களை பறக்கவிட்டு தெறிக்கவிட்டுள்ளனர். அந்த காட்சிகள் தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X