முத்தக் காட்சியா...அய்யய்யோ என்னால முடியாதுப்பா...அலறி ஓடும் டாப் ஹீரோ
மும்பை : முத்தக் காட்சியில் நடிக்க மிகவும் கூச்சப்பட்டு டாப் ஹீரோ ஒருவரே தயக்கம் காட்டுவதுடன், ஒவ்வொரு முறையும் டைரக்டரிடம் போய் முத்தக்காட்சி வேண்டுமா என்றும் கேட்டு வரும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவரா இப்படி, ஏன் இவருக்கு என்ன பிரச்சனை என பலரும் கேட்டு வருகின்றனர்.
நடிகர்கள் பலருடன் முத்தக்காட்சி உள்ளிட்ட நெருக்கமான காட்சிகளில் நடிக்க மறுத்து நடிகைகள் பலருக்கு பட வாய்ப்புகள் பறிப்போன கதையெல்லாம் நடந்துள்ளது. ஆனால் முத்தக்காட்சிகள் என்பது தற்போது அனைத்து படங்களிலும் சர்வ சாதாரணமாக மாறி விட்டது. ஆனால் தற்போது கூட பலரின் ஃபேவரைட் ஹீரோ ஒருவர் முத்தக்காட்சியில் நடிக்க தயங்கி வரும் தகவல் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. அதையும் அவரே ஓப்பனாக கூறி உள்ளார்.

ரிலீசுக்கு தயாராகும் ராதே ஷ்யாம்
பிரபாஸ் - பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷ்யாம் படம் மார்ச் 11 ம் தேதி பல மொழிகளிலும் மிக பிரம்மாண்டமாக ரிலீசாக உள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. பீரியாடிக் ரொமான்டிக் படமான ராதே ஷ்யாம் படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹீரோ பிரபாஸ் உள்ளிட்ட பலரும் சமீப காலமாக ப்ரொமோஷன் வேலைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முத்தக் காட்சியா...அய்யய்யோ
அப்படி சமீபத்தில் மும்பையில் ராதே ஷ்யாம் படத்தின் ப்ரொமோஷன் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மீடியாக்களிடம் பேசிய நடிகர் பிரபாஸ், முத்தக் காட்சிகளில் நடிக்கும் போது தான் கூச்சமாகவும், unconfortable ஆகவும் உணர்வதாக கூறினார். மேலும் ராதே ஷ்யாம் படத்தில் பூஜா ஹெக்டேவுடனான முத்தக் காட்சிகள் வரும் போதெல்லாம் டைரக்டர் ராதாகிருஷ்ண குமாரிடம் போய், இந்த சீன் அவசியம் தானா என்றும் கேட்டாராம் பிரபாஸ். ஆனால் கதை படி அந்த காட்சி தேவைப்படுகிறது என ஒவ்வொரு முறையும் சமாதானம் செய்து, பிரபாசை நடிக்க வைத்தாராம் டைரக்டர். இந்த தகவலை பிரபாஸே ஓப்பனாக மேடையில் கூறி உள்ளார்.

பிரபாஸுக்கு இப்படி ஒரு வீக்னஸா
முத்தக்காட்சிகளில் மட்டும் இல்லையாம், சட்டையை கழற்றி விட்டு நடிக்க சொல்லும் போதும் பிரபாஸ் Uncomfortable ஆக உணர்வதாக சொன்னாராம். செட்டில் சட்டையை கழற்ற சொன்னால், செட்டில் இவ்வளவு பேர் இருக்கிறார்கள். அனைவரும் பார்ப்பார்கள். எங்காவது மறைவான இடத்திற்கு சென்று இந்த சீனை எடுப்போமா என கேட்பாராம் பிரபாஸ்.

தைரியம் கொடுத்த ராஜமெளலி
ராதே ஷ்யாம் படத்தின் போது மட்டுமல்ல 2005 ல் சத்ரபதி படத்தில் நடிக்கும் போதும் பிரபாஸ் இதே போல் கூறினாராம். அப்போது ராஜமெளலி அவரை அழைத்து செட்டில் அனைவரின் முன்னிலையிலும் சட்டையை கழற்றி நடிக்க வைத்தாராம். அந்த காட்சியில் பிரபாஸ் நடித்த பிறகு, இனி உங்களால் எதையும் செய்ய முடியும் என்றாராம். இந்த தகவலையும் பிரபாஸே கூறி உள்ளார்.


Click it and Unblock the Notifications











