»   »  நயன் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அதே பரிசை அனுஷ்காவுக்கு அளித்த பிரபாஸ்

நயன் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அதே பரிசை அனுஷ்காவுக்கு அளித்த பிரபாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அனுஷ்காவின் பிறந்தநாளுக்கு பிரபாஸ் கொடுத்த காஸ்ட்லி பரிசு பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக பல காலமாக பேசப்படுகிறது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

அவர்களோ நாங்கள் காதலிக்கவில்லை என்று கூறி வருகிறார்கள். ஆனால் அவர்களின் பேச்சை நம்ப ரசிகர்கள் தயாராக இல்லை.

கார்

கார்

அனுஷ்கா தனது 36வது பிறந்தநாளை கடந்த 7ம் தேதி கொண்டாடினார். அவருக்கு பிரபாஸ் விலை உயர்ந்த பி.எம்.டபுள்.யூ காரை பரிசளித்துள்ளாராம்.

உறுதி

உறுதி

பிரபாஸ் அனுஷ்காவுக்கு அளித்த விலை உயர்ந்த பரிசு குறித்த தகவல் அறிந்த ரசிகர்களோ இது கன்ஃபர்ம் காதல் தான் என்று கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ச்

வாட்ச்

முன்னதாக கடந்த மாதம் பிரபாஸ் பிறந்தநாளைக்கு விலை உயர்ந்த டிசைனர் கைக்கடிகாரத்தை அனுஷ்கா பரிசாக அளித்தார். பிரபாஸுக்கு கைக்கடிகாரங்கள் மிகவும் பிடிக்குமாம்.

பிசி

பிசி

பிரபாஸ் தற்போது சுஜீத் இயக்கத்தில் சாஹோ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்கிறாராம்.

English summary
According to a few reports doing the rounds, Prabhas has gifted a lavish BMW to Anushka as a birthday gift. The news must have definitely got the couple’s fans excited.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos