Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இத்தனை பண்டிகைகளா? ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர மாஸ்டர் பிளான் போட்ட பிரபாஸ் படக்குழு!
சென்னை: டார்லிங் பிரபாஸின் நடிப்பில் உருவாகி உள்ள ராதே ஷ்யாம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.
தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், டோலிவுட் ரசிகர்களை உற்சாகப்படுத்த நினைத்த பிரபாஸ் படக் குழு, பான் இந்தியா படமாக ராதே ஷ்யாம் வெளியாக உள்ளதால், ஒட்டுமொத்த இந்திய மக்களையும் கொண்டாட்ட மோடுக்கு அழைத்துச் செல்லும் ஏற்பாடை செய்துள்ளனர்.
நகைச்சுவை
நடிகர்
செந்திலுக்கு
கொரோனா..
குடும்பத்துடன்
தனியார்
மருத்துவமனையில்
அனுமதி!
அதன் விளைவாக #RadheShyam ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி வருகிறது.

காதல் காவியமாக
பாகுபலி, சாஹோ, சலார், ஆதிபுருஷ் என ஒரு பக்கம் ஆக்ஷனில் அடித்து வெளுக்கும் நடிகர் பிரபாஸ், தன்னை டார்லிங் பிரபாஸ் என செல்லமாக அழைக்கும் இளைஞர்களுக்காக பியூட்டிஃபுல் ரொமான்டிக் படம் ஒன்றையும் கொடுக்க உள்ளார். ராதே ஷ்யாம் என்கிற டைட்டிலில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் அந்த படம் வெளியாக உள்ளது.

பிரேரானா
அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுறமுலோ படத்தை முடித்த கையோடு அடுத்ததாக பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் ஹீரோயினாக கமீட் ஆனார் பூஜா ஹெக்டே. விக்ரமாதித்யா எனும் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்க பிரேரானா எனும் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பிரபாஸ் படத்திற்கு பிறகு தற்போது தளபதி 65 படம் மற்றும் ராம்சரண், சிரஞ்சீவியின் ஆச்சார்யா உள்ளிட்ட படங்களிலும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

எப்போ ரிலீஸ்
காதலை பிரம்மாண்டமாக சொன்ன டைட்டானிக் படத்தை போல இந்த படமும் 250 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டு காதல் காவியமாக உருவாகி வருகிறது. இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஜூலை 30ம் தேதி திரைக்கு வருகிறது.

யுகாதியை முன்னிட்டு
தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், யுகாதி பண்டிகையை முன்னிட்டு டோலிவுட் ரசிகர்களை சந்தோஷ வெள்ளத்தில் ஆழ்த்த நடிகர் பிரபாஸ் செம ஹேண்ட்ஸமாக இருக்கும் புதிய போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டு யுகாதி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

இத்தனை பண்டிகைகளா
பான் இந்தியா நடிகராக பிரபாஸ் மாறி உள்ள நிலையில், ராதே ஷ்யாம் படமும் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில், யுகாதி வாழ்த்துக்களை மட்டுமின்றி, தமிழ்ப் புத்தாண்டு, குடி பட்வா, பைசாகி, விஷு, ஜுர் சிதல், சேட்டி சந்த், போஹக் பிஹு, நவ்ரே மற்றும் பொய்லா போஷாக் என இன்று மற்றும் நாளை கொண்டாடப்படவுள்ள மொத்த பண்டிகைகளின் லிஸ்ட்டையும் போட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.