ஆசியாவிலேயே அழகான ஆண் இவர் தானாம்...கலகலத்து போன டாப் ஹீரோக்கள்
சென்னை : சமீபத்தில் Fancy Odds என்ற விளையாட்டு நிறுவனம், டாப் 10 most Handsome Asian Men பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த போட்டியில் எத்தனை பேர் பங்கேற்றார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் உலகின் பல நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.
டாப் 10 most handsome asian men பட்டியலில் பாகிஸ்தானின் இம்ரான் அப்பாஸ் நஹ்வி, ஜப்பானின் ஜின் அகானிஷி, சீனாவின் ஹுயாங் ஷியாமிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். பல நாட்களுக்கு முன்பே இந்த பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது Fancy Odds நிறுவனம்.

இவர் தான் காரணமா
ஆனால் இப்போது தான் இதுவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதற்கு காரணம் பிரபாஸ் தான். இந்த பட்டியலில் பிரபாஸ் முதல் இடம் பிடித்தது தான் இந்த பட்டியல் வெளிவர காரணமே.

ஆசியாவிலேயே அழகான ஆண்
பாகுபலி படத்திற்கு பிறகு உலக பாப்புலர் ஹீரோ ஆகி விட்டார் பிரபாஸ். வசூலில் உலக சாதனை படைத்த படமும் பாகுபலி தான். பாகுபலி படத்திற்கு பிறகு பலரின் ஃபேவரைட் ஹீரோவாகி விட்டார் பிரபாஸ். இப்போது ஆசியாவிலேயே அழகான ஆண் என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

ராதே ஷ்யாமிற்காக காத்திருக்கும் பிரபாஸ்
பிரபாஸ் தற்போது ஆதிபுருஷ், சலார் படங்களில் நடித்து வருகிறார். மற்றொரு படமான ராதே ஷ்யாம் இந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பிரபாஸ் நடிக்கும் சையின்ஸ் ஃபிக்சன் படத்திற்காக ரமோஜி ஃபிலிம் சிட்டியில் சிறப்பு செட் அமைக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் படத்தில் அமிதாப் பச்சன்
நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம், இந்த சிறப்பு செட்டில் இன்று துவங்கி உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சனும் கலந்து கொண்டுள்ளார். இந்த படம் ரூ.500 கோடியில் மெகா பட்ஜெட் படமாக உருவாகிறதாம்.


Click it and Unblock the Notifications











