»   »  ஹமாரா துஷ்மன் கோ... அதாவது பிரபாஸ் இந்திப் படத்தில் நடிக்கப் போறார்னு சொல்ல வந்தோம்!

ஹமாரா துஷ்மன் கோ... அதாவது பிரபாஸ் இந்திப் படத்தில் நடிக்கப் போறார்னு சொல்ல வந்தோம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களில் நடித்து புகழின் உச்சிக்கே சென்ற நடிகர் பிரபாஸ் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் நடித்து வெளியான பாகுபலி திரைப்படத்தின் 2 பாகங்களும் தமிழ், தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வசூல் சாதனையை படைத்தது.

Prabhas will get busy with his upcoming action film Saaho

இந்நிலையில் சாஹோ என்ற இந்தி திரைப்படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்று வதந்தி பரவியது. எனினும் இதற்கு இத்தனை நாள்களாக எந்த வித எதிர்ப்பையும் காட்டவில்லை.

இந்நிலையில் பாலிவுட் படத்தில் தான் நடிப்பது குறித்து தற்போது பிரபாஸ் ஒப்புக் கொண்டுள்ளார். தற்போது கோடை விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் அமெரிக்கா சென்றுள்ள பிரபாஸ், அங்கிருந்து இந்தியா வந்தவுடன் சாஹோ படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் திரைக்கு வரவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படமாகிறது. படத்தின் பட்ஜெட் ரூ.150 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படத்தை சுஜீத் இயக்குகிறார், வம்சி கிருஷ்ணா ரெட்டி தயாரிக்கிறார்.

English summary
Baahubali 2 Actor Prabhas has finally reacted on the rumours of his Bollywood Debut. The actor was currently enjoying his holiday in US with close friends. Prabhas has returned from US and soon will get busy with his upcoming action film Saaho.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil