»   »  நண்பேன்டா.... விஜய்க்கு உதவ மீண்டும் கை கொடுத்த பிரபு தேவா!

நண்பேன்டா.... விஜய்க்கு உதவ மீண்டும் கை கொடுத்த பிரபு தேவா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேவி படத்துக்குப் பிறகு இயக்குநர் விஜய் - பிரபு தேவாவின் நட்பின் நெருக்கம் இன்னும் அதிகரித்துள்ளது.

தேவி படம் சுமாராகப் போனாலும், அந்தப் படம்தான் பிரபு தேவாவின் நடிப்புக் கேரியரை மீண்டும் தமிழில் ஆரம்பித்து வைத்தது. அந்த நன்றிக்காகவே விஜய்யை வைத்து வனமகன் படத்தை தனது சொந்த பேனரில் தயாரித்துள்ளார் பிரபு தேவா.


Prabhu Deva helps Vijay again

அடுத்து விஜய் இயக்கப் போகும் புதிய படத்தின் பெயர் கரு. இந்தப் படத்துக்கும் ஏதாவது ஒரு வகையில் உதவ நினைத்தார் பிரபு தேவா.


பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக உள்ள இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.


இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படுகிறது. அந்த போஸ்டரை பிரபுதேவா வெளியிடுகிறார்.


பிரேமம்' மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான சாய் பல்லவிதான் இந்தப் படத்தின் நாயகி.

English summary
Prabhu Deva is going to launch the first look of Director Vijay's Karu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil