Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தாருடன் நேரம் செலவிட முயற்சிக்கவும்...
- Finance
அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கில் NEFT, RTGS வசதி? செய்வது எப்படி?
- News
8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் - ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம்
- Sports
வாட்ச்-க்கு ஆசைப்பட்டு ரூ.2.5 கோடி அபேஸ்.. மோசடி வழக்கில் ரிஷப் பண்ட்.. அப்படி என்ன நடந்தது!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஓலா நிறுவனம் செய்த சூப்பரான காரியம்... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!
- Technology
ஒப்போ ரெனோ 8 ப்ரோ+, ரெனோ 8 ப்ரோ , ரெனோ 8 அறிமுகம்: வெவ்வேறு ரகம், விதவிதமான விலை- ஆரம்ப விலை!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த பொங்கலும் போக்கிரி பொங்கலா? தளபதி 66 இன்ட்ரோ சாங் கொரியோகிராபர் யார் தெரியுமா?
சென்னை: இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில் மொத்தம் 6 பாடல்களை தமன் போடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், ஹாட் அப்டேட்டாக இன்ட்ரோ சாங் நடனத்தை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா கொரியோகிராஃப் பண்ணப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் மீண்டும் போக்கிரி பொங்கல் வைக்கப் போகிறாரார்களா விஜய் மற்றும் பிரபுதேவா கூட்டணி என டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சிஷ்யனை பாராட்டிய இயக்குநர் அட்லி.. சிவகார்த்திகேயனும், சிபியும் கலக்கிட்டீங்கடா என செம ட்வீட்!

ஜானி மாஸ்டருக்கு நோ
பீஸ்ட் படத்தில் நடிகர் விஜய்க்கு கஷ்டமான ஸ்டெப்ஸ்களை கொடுத்தாலும், அவை தேவையில்லாமல் திணிக்கப்பட்டதாகவும், ரசிக்கும்படி இல்லை என்றும் அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா பாடல் வீடியோக்களை பார்த்த பிறகு கடுமையான விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் வைத்துள்ளனர். இந்நிலையில், தளபதி 66 படத்தில் ஜானி மாஸ்டருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமன் தாண்டவம்
மூன்று பாடல்கள் சீனெல்லாம் கிடையாது. தளபதி 66 படத்துக்கு தரமாக ஓப்பனிங் பாடல், ரொமான்ஸ் பாடல், ஃபீலிங் சாங், கிளைமேக்ஸ் குத்து சாங் என ஒட்டுமொத்தமாக 6 பாடல்களை போட்டு தாண்டவம் ஆட தமன் ரெடியாகி விட்டார். இந்நிலையில், அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக இன்ட்ரோ பாடலுக்கு பிரபுதேவா கொரியோகிராஃபி செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

போக்கிரி பொங்கல்
பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த போக்கிரி படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அந்த படத்தின் அறிமுக பாடலான போக்கிரி பொங்கல் பாடல் வெறித்தனமாக ஹிட் ஆனது. விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து வேறலெவலில் நடனம் ஆடி ரசிகர்களை தியேட்டரில் கொண்டாட வைத்திருப்பார்கள். இந்நிலையில், மீண்டும் அப்படியொரு மேஜிக் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரையில் நடக்கும் என தற்போது வெளியாகி உள்ள தகவல்களால் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து வருகின்றனர்.

ஷோபி மாஸ்டர்
இன்னொரு பாடலுக்கு ஷோபி மாஸ்டர் கொரியோகிராஃபி செய்யப் போவதாகவும் தகவல்கள் தற்போதைக்கு வெளியாகி உள்ளன. விரைவில் இந்த பாடல் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கப் போவதாகவும் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா பங்கேற்க போவதாகவும் கூறப்படுகிறது. தளபதி 66 படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பக்காவான ஃபேமிலி என்டர்டெயினராக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.