»   »  திருப்பதியில் பிரபுதேவா - நிக்கி கல்ரானி திருமணம்! - 'சார்லி சாப்ளின் 2' பற்றி ஷக்தி சிதம்பரம்

திருப்பதியில் பிரபுதேவா - நிக்கி கல்ரானி திருமணம்! - 'சார்லி சாப்ளின் 2' பற்றி ஷக்தி சிதம்பரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
திருப்பதியில் பிரபுதேவா - நிக்கி கல்ரானி திருமணம்!- வீடியோ

சென்னை : பிரபுதேவா நடிப்பில் உருவாகிவரும் 'சார்லி சாப்ளின் 2' படத்தின் கதை குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.

'சார்லி சாப்ளின்' படத்தைத் தொடர்ந்து, 'சார்லி சாப்ளின் 2' என்ற பெயரில் படமொன்றை இயக்கி வருகிறார் ஷக்தி சிதம்பரம்.

அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்தில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

சூப்பர்ஹிட் சாப்ளின்

சூப்பர்ஹிட் சாப்ளின்

2002-ம் ஆண்டு 'சார்லி சாப்ளின்' படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியில் 'நோ என்ட்ரி', தெலுங்கில் 'பெல்லம் ஊர் எல்தே', மலையாளத்தில் 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்', கன்னடத்தில் 'அல்லா புல்லா சுல்லா' மற்றும் போஜ்பூரி, ஒரியா, மராத்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

கிரேஸி மோகன் வசனம்

கிரேஸி மோகன் வசனம்

கோவாவில் 'சார்லி சாப்ளின் 2' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கிரேஸி மோகன் வசனம் எழுத, ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ஷக்தி சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபுதேவா நிக்கி கல்ரானி திருமணம்

பிரபுதேவா நிக்கி கல்ரானி திருமணம்

பிரபுதேவா - நிக்கி கல்ரானி இருவருக்கும் திருப்பதியில் திருமணம் நடக்க இருக்கிறது. அதற்காக பிரபுதேவா குடும்பமும், நிக்கி கல்ரானி குடும்பமும் திருப்பதிக்கு போகும்போதும், அங்கு போய்ச் சேர்ந்த பிறகும் நடக்கும் சம்பவங்களின் கலகலப்பான தொகுப்பே 'சார்லி சாப்ளின் 2'. எனக் கூறியுள்ளார் ஷக்தி சிதம்பரம்.

சஸ்பென்ஸ்

சஸ்பென்ஸ்

'திருப்பதிக்கு போனா திருப்பம் வரும் என்பார்கள். 'சார்லி சாப்ளின் 2' படத்திலும் அப்படி ஒரு திருப்பம் ஏற்படுகிறது. அது என்ன திருப்பம் என்பது படத்தின் சஸ்பென்ஸ்.' எனக் கூறியுள்ளார்.

English summary
Director Shakti Chidambaram has told the story phase of 'Charlie Chaplin 2' which is being lead by Prabhu Deva. Prabhu Deva and Nikki galrani are going to Tirupati to marry in this film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil