»   »  ரஜினிக்கு ஒரு குத்து.. கமலுக்கு ஒரு குத்து.. - நடிகர் பிரபுவின் ஆதரவு யாருக்கு?

ரஜினிக்கு ஒரு குத்து.. கமலுக்கு ஒரு குத்து.. - நடிகர் பிரபுவின் ஆதரவு யாருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியின் அரசியல் வாரிசு தனுஷின் அடுத்த படம் என்ன?- வீடியோ

சென்னை : ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அடுத்தடுத்து தங்களது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

சினிமா துறையில் உள்ள பலரும் இவர்களின் அரசியல் பயணத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் பிரபு, கமல், ரஜினி இருவரையும் அரசியலில் சமமாக பார்க்கிறேன் என்றும் அவர்கள் இருவருக்காகவும் பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார்.

அரசியலில் கமல்

அரசியலில் கமல்

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் அடுத்தடுத்து தங்களது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர். கமல்ஹாசன் தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்து பொதுக்கூட்டத்தை நடத்தத் தொடங்கிவிட்டார்.

ரஜினி

ரஜினி

ரஜினிகாந்த மக்கள் மன்றம் மட்டும் தற்போது செயல்பட்டு வருகிறது. இன்னும் முழு வீச்சில் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கவில்லை. சினிமா துறையில் உள்ள பலரும் இவர்களின் அரசியல் பயணத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் பிரபு ஆதரவு

நடிகர் பிரபு ஆதரவு

இந்நிலையில் நடிகர் பிரபு, கமல், ரஜினி இருவரையும் அரசியலில் சமமாக பார்க்கிறேன் என்றும் அவர்கள் இருவருக்காகவும் பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறியுள்ளார். ரஜினி பிரபு குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருக்கும்

இருவருக்கும்

பாரபட்சமின்றிஇரண்டு பேருடனும் இருக்கும் நல்ல நட்பால் அரசியலில் ரஜினி, கமல் இருவரையும் சமமாக பார்க்கிறேன் அவர்கள் இருவருக்காகவும் பிரச்சாரம் செய்வேன் என்று பிரபு கூறியுள்ளார். ஆனால், ஓட்டு ஏதாவது ஒருத்தருக்கு தானே போட முடியும் இளைய திலகமே?

English summary
Rajinikanth and Kamal Haasan have begun their political journey. Actor Prabhu looking both Kamal and Rajini's politics equally and said he will campaign for both of them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X