Bayilvan Dude Review: ‘டியூட்‘ படம் சுமரா? சூப்பரா? பயில்வான் ரங்கநாதனின் விமர்சனம்!
சென்னை: அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் 'டியூட்'. மமிதா பைஜூ, சரத்குமார், ரோகினி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பயில்வான் ரங்கநாதனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் சரத்குமாரின் சகோதரி ரோகினியின் மகன் தான் பிரதீப் ரங்கநாதன். சரத்குமாரின் மகள் தான் மமீதா பைஜூ. எப்போதும் ஜாலியாக அரட்டை அடித்துக்கொண்டு பொழுதை கழித்து வரும் பிரதீப் ரங்கநாதன், பிரான்க் மற்றும் சர்பிரைஸ் கொடுக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மமிதா பைஜு, பிரதீப் இருவரும் சிறு வயதில் இருந்தே, ஒன்றாக சுற்றி வருகின்றனர். ஒரு கட்டத்தில் மமிதா பைஜுக்கு பிரதீப் மீது காதல் வர. அந்த, காதலை மமிதா, வெளிப்படையாக சொல்கிறார். ஆனால், பிரதீப் எனக்கு உன் மீது காதல் வரவில்லை என்கிறார்.

டியூட் : இதுக்கு மேலும், இங்கே இருந்தால் சரிபட்டு வராது என்று முடிவு எடுக்கும் மமிதா,மேல் படிப்பு படிக்க வெளியூருக்கு சொல்கிறார். மாமா மகளின் காதலை ஏற்க மறுத்த பிரதீப், ஒரு கட்டத்தில் மமிதா மீது காதல் வருகிறது. அந்த விஷயத்தை பிரதீப், மாமா சரத்குமாரிடம் சொல்ல, அவர் சந்தோஷப்பட்டு திருமணத்திற்கான ஏற்பாடு செய்கிறார். திருமணம் நடக்கும் நாளில், எனக்கு பிரதீப் மீது காதல் இல்லை, நான் வேறு ஒருவரை காதலிப்பதாக சொல்கிறார் மமிதா ,அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் டியூட் திரைப்படத்தின் கதை.
சிறப்பான நடிப்பு: பிரதீப் ரங்கநாதன் பார்ப்பதற்கு நாகேஷ் மற்றும் தனுஷ் போல இருந்தாலும், சண்டையில் புகுந்து விளையாடி இருக்கிறார். சண்டை மட்டுமில்லாமல் முகபாவத்திலும் கலக்கி ஹாட்ரிக் வெற்றியை பெற்று வெற்றிப்பட ஹீரோவாகி இருக்கிறார். ஒரு விவகாரமான கதையில், நன்றாக கதையை உள்வாங்கிக் கொண்டு நடித்து இருக்கிறார் பிரதீப். இவரைத் தவிர வேறுயாரும் இப்படி நடிக்க முடியாது. அந்த அளவிற்கு சிறப்பாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் மமிதா பைஜு நடித்து இருக்கிறார். மலையாளத்தில் ஏற்கனவே அவர் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும், இதுதான் தமிழில் அவர் முதல் படம் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.
அட்டகாசமான இசை: சரத்குமார் இதுவரைக்கும் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்ததே இல்லை. அப்படி ஒரு குழந்தைத்தனமாக ரோலில் நடித்து இருக்கிறார். இசை வெளியீட்டு விழாவில் கூட, இந்த படத்தில் இதுவரை பார்க்காத வித்தியாசமான சரத்குமாரை பார்ப்பீர்கள் என்று சொன்னார். அவர் சொன்னது போல, படத்தில் அமர்க்களப்படுத்திவிட்டார். ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது எந்த இடத்திலும் குறை சொல்லும் அளவிற்கு இல்லை. அதே போல சாய் அபயங்கர் முதல் படத்திலேயே அட்டகாசமான இசையை கொடுத்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்து இருக்கிறார். படத்தில் வரும் ஐந்து பாடல்களுமே மீண்டும் மீண்டும் கேட்க கூடிய பாடல்களாக இருக்கின்றன. இந்த படத்தினுடைய வெற்றிக்கு சாய் அபயங்கரின் இசை முதுகெலும்பாக உள்ளது. அடுத்த அனிருத்,சாய் அபயங்கர தான் என்பதை அடித்து சொல்வேன் என பயில்வான் ரங்கநாதன் டியூட் திரைப்படத்தின் விமர்சனத்தை கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











