Box Office: டிராகன் முதல் நாள் வசூலை முந்துமா டியூட்?.. இந்த தீபாவளிக்கு வசூல் வேட்டை சாத்தியமா?
சென்னை: சிவகார்த்திகேயனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் நல்ல வளர்ச்சியை பெற்று வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ரவி மோகனை வைத்து அவர் இயக்கிய கோமாளி படம் ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக லவ் டுடே படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்து ரிலீஸ் செய்து வெற்றிப் பெற்றார்.
முதல் நாளே லவ் டுடே திரைப்படம் இந்தியளவில் 2.5 கோடி ஓபனிங் கொடுத்தது. இந்த ஆண்டு வெளியான பல இளம் நடிகர்கள் படங்களுக்கே அந்த ஓபனிங் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லவ் டுடே திரைப்படம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர 100 கோடி வரை வசூல் ஈட்டி ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு வெற்றிப் படமாக மாறியது.

லவ் டுடே படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்துக்குப் பிறகு அதிக பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை அள்ளிய தமிழ் படமாகவே டிராகன் தான் உள்ளது.
டிராகன் முதல் நாள் வசூல்: பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து ரசிகர்களை கவரக்கூடிய படங்களை செலக்ட் செய்து தனது ஒட்டுமொத்த நடிப்பையும் போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். டிராகன் திரைப்படம் 150 கோடி வரை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்த நிலையில், அந்த படம் முதல் நாளில் 6 கோடி ரூபாய் வரை இந்தியளவில் வசூல் ஈட்டியது. இந்நிலையில், தீபாவளி ரிலீஸாக வெளியாக காத்திருக்கும் டியூட் திரைப்படத்தின் முதல் நாள் ஓபனிங் டிராகன் படத்தை விட அதிகம் வருமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

டிக்கெட் புக்கிங் ஓபன்: இந்த தீபாவளிக்கு வெளியாகும் படங்களில் முன்கூட்டியே டிக்கெட் புக்கிங்கை ஓபன் செய்து ஆட்டத்தை டியூட் படம் ஆரம்பித்துள்ளது. ஏஜிஎஸ் தியேட்டர்கள் எல்லாம் இப்போதே அரங்கு நிறைந்த காட்சிகளாக மாறி வருகின்றன. மேலும், முன்னணி நடிகர்களுக்கு வழங்குவது போல மாயாஜால் சினிமாஸில் ஏகப்பட்ட ஷோக்கள் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்துக்கு ஒதுக்கியிருக்கிறது. பிவிஆர் உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் தியேட்டர்களின் டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வட அமெரிக்காவில் இதுவரை 1 லட்சம் டாலர்கள் வரை அட்வான்ஸ் புக்கிங் மூலம் டியூட் படம் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டியூட் முதல் நாள் வசூல் கணிப்பு: டிராகன் திரைப்படம் முதல் நாளில் 6 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், டியூட் திரைப்படம் டபுள் டிஜிட் ஓபனிங்கை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தீபாவளிக்கு ஜாலியாக ரசிகர்கள் பார்த்து என்ஜாய் பண்ணக் கூடிய படமாக டியூட் தான் இருக்கும் என்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தெலுங்கிலும் பெரிய அளவில் டியூட் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், 10 கோடிக்கு மேல் முதல் நாள் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பைசன் மற்றும் டீசல் படங்கள் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்துக்கு எந்தளவுக்கு டஃப் கொடுக்கும் என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். இந்த முறையும் பிரதீப் ரங்கநாதன் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைப்பாரா என்கிற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications











