Dude Day 9 Box Office - 2வது வாரத்திலும் கெத்து காட்டும் டியூட்.. 9வது நாள் வசூல் தெரியுமா?.. செம ரெஸ்பான்ஸ்

சென்னை: பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியிருக்கும் டியூட் திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே நூறு கோடி ரூபாயை அள்ளி மாஸ் காண்பித்தது. இந்தியாவிலேயெ ஹீரோவாக நடித்து முதல் மூன்று படங்களிலும் 100 கோடி க்ளப்பில் இணைந்த ஹீரோ என்ற பெருமையையும் அவர் இதன் மூலம் பெற்றிருக்கிறார். இந்நிலையில் படம் வெளியான இரண்டாவது வாரத்திலும் வசூலில் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றுவருகிறது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவான டியூட் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி வெளியானது. இப்படத்துடன் மாரி செல்வராஜ் இயக்கிய பைசன், அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கிய டீசல் ஆகிய இரண்டு படங்கள் ரிலீஸாகின. இவற்றில் மாரியின் படம் என்பதால் பைசன் படம் டியூடுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டியூட்தான் ரேஸில் டாப்: ஆனால் மறுபக்கம் லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களின் மூலம் 2கே கிட்ஸ் மத்தியில் செல்வாக்கு மிக்க ஹீரோவாக மாறியிருக்கிறார் பிரதீப். அதன் காரணமாக ஜென் ஸி தலைமுறையினர் டியூட் படத்துக்கே முதல் ஆளாக சென்றார்கள். இதனால் ரிலீஸான முதல் நாளிலேயே வசூலில் மாஸ் காண்பித்தது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டது.

முக்கியமான கதை: இந்தப் படத்தில் ஆணவ கொலைக்கு எதிரான கருத்தினை இயக்குநர் ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். 'உங்களுக்கு பிடிக்கலைனா கொலை செய்வீங்களா.. அப்படி தாங்க முடியலனா நீங்க போய் சாவுங்க' என்ற வசனம் அண்மையில் நடந்த கவின் ஆணவ படுகொலையை நினைவுகூரும்படி இருந்தது வெகுவாக கொண்டாடப்பட்டது. அதேபோல் இன்னும் சில காட்சிகளும் படத்தில் முக்கியமானதாவே பார்க்கப்பட்டது.

Pradeep Ranganathan s Dude Day 9 Box Office is 3 Crores Strong Collection come in Also Second Week

ஹாட்ரிக் அடித்த பிரதீப்: முக்கியமாக படம் வெளியான முதல் வாரத்திலேயே படம் நூறு கோடி ரூபாய் வசூலை அள்ளிவிட்டதாக பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிவித்தது. இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று முறை 100 கோடி ரூபாய் எடுத்த ஹீரோ என்ற மைல் கல்லையும் PR பெற்றிருக்கிறார். டியூட் படத்தின் வெற்றி கண்டிப்பாக பிரதீப்பின் மார்க்கெட்டையும், சம்பளத்தையும் இன்னும் உயரத்துக்கு கொண்டு செல்லும்.

இரண்டாவது வாரத்திலும் சூப்பர்: இரண்டாவது வாரத்தில் நிச்சயமாக படத்துக்கான வசூல் குறைந்துவிடும் என்றே கணிக்கப்பட்டது. ஆனால் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக இப்போதும் வசூல் நல்லபடியாக வருகிறது என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரம் தெரிவிக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, இந்தியாவில் அந்தப் படம் ஒன்பதாவது நாளான நேற்று 3.15 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது வாரத்திலும் டியூடுக்கு வசூல் குவிந்துவருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X