Dude Day 2 Box Office - 2k கிட்ஸ் மத்தியில் பிரதீப் ரங்கநாதன்தான் கெத்து.. உறுதி செய்த 2வது நாள் வசூல்
சென்னை: கீர்த்திஸ்வரன் இயக்குநராக அறிமுகமாகியிருக்கும் டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்திருக்கிறார். சரத்குமார் உள்ளிட்டோர் முக்கியமான ரோலை ஏற்றிருந்தார்கள். படம் வெளியாகி மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருக்கும் சூழலில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்திருக்கும் மூன்றாவது படம் டியூட். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் சாய் அபயங்கர் இசையமைப்பாளராகவும், மமிதா பைஜு ஹீரோயினாகவும் அறிமுகமாகியிருக்கிறார்கள். மூன்று பேர் கோலிவுட்டில் டியூட் மூலம் அறிமுகமாகியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படமானது நேற்று ரிலீஸானது.
பலத்த போட்டி: மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் காளமாடன், சண்முகம் முத்துசாமி இயக்கிய டீசல் ஆகிய இரண்டு படங்கள் களமிறங்கி பலத்த போட்டியை கொடுத்தன. அதிலும் மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர், டீசல் ஹீரோ ஹரிஷ் கல்யாண் வரிசையாக இரண்டு படங்கள் (லப்பர் பந்து, பார்க்கிங்) ஹிட் கொடுத்த்வர் என்ற நிலைமையில் இந்த பலத்த போட்டியை பிரதீப் ரங்கநாதனின் டியூட் சமாளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

படம் சூப்பர் டூப்பர் ஹிட்: ஆனால் தீபாவளி ரேஸில் அசால்ட்டாக பந்தயம் அடித்திருக்கிறார் பிரதீப். கமர்ஷியல் ஜானரில் படம் உருவாகியிருந்தாலும் ஆணவ கொலை என்ற முக்கியமான விஷயத்தை படத்தில் துவைத்திருக்கிறார்கள். 2கே கிட்ஸ்களுக்கு மத்தியில் செல்வாக்கு மிகுந்தவராக மாறியிருக்கும் ஒரு ஹீரோவை வைத்து இந்த சென்சிட்டிவ்வான விஷயத்தை பேசியிருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
அதுமட்டுமில்லை: படத்தின் கதையும், திரைக்கதையும் ஒருபக்கம் பலமாக இருக்க; மறுபக்கம் படம் முழுக்க பிரதீப்பின் நடிப்பும் அனைவரையும் ரசிக்க வைத்தது. லவ் டுடே, டிராகன் ஆகிய இரண்டு படங்களின் நடிப்பு சாயல் இதிலும் தெரிந்தாலும்; அது பெரிய குறையாக இல்லை. மாறாக அனைவருமே அதனை ரசிக்கும்படி கதாநாயகன் செய்திருந்ததும் இப்படத்தின் வெற்றிக்கு ப்ளஸ்ஸாக அமைந்துவிட்டது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இத்திரைப்படம் உலகம் முழுவதும் 22 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் படக்குழுவினரும், PR ரசிகர்களும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் படம் வெளியான இரண்டாவது நாளான நேற்று டியூட் திரைப்படம் இந்தியாவில் செய்திருக்கும் வசூல் குறித்த தகவலை Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கிறது.
கன்ஃபார்ம் செய்த ரிப்போர்ட்: அதன்படி நேற்று அந்தப் படம் இந்தியாவில் மட்டும் 9.75 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அந்தத் தளத்தின் ரிப்போர்ட்படி இதுவரை இரண்டு நாட்களில் 19.75 கோடி ரூபாய் கலெக்ட் செய்திருக்கிறது. இதன் மூலம் 2கே கிட்ஸ்களிடம் செல்வாக்கு மிகுந்த ஹீரோவாக பிரதீப் உருமாறிவிட்டார் என்று திரைத்துறையினர் சொல்கிறார்கள். வாழ்த்துகள் பிரதீப் ரங்கநாதன்.


Click it and Unblock the Notifications











