Dude X Review - பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் அடித்தாரா?.. டியூட் எப்படி இருக்கு?.. இதோ ட்விட்டர் விமர்சனம்

சென்னை: லவ் டுடே, டிராகன் என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் டியூட் படத்தில் நடித்திருக்கிறார். கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் பற்றிய ட்விட்டர் விமர்சனங்கள் வர தொடங்கியிருக்கின்றன. அவற்றை இதில் பார்க்கலாம்.

இயக்குநராக திரைத்துறைக்குள் வந்த பிரதீப் ரங்கநாதன் இப்போது நூறு கோடி ரூபாய் வசூலிக்கும் ஹீரோவாக மாறியிருக்கிறார். அவரே இயக்கி நடித்த லவ் டுடே, அஸ்வத் மாரிமுத்து இயக்கிய டிராகன் ஆகிய இரண்டு படங்களுமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டன. அதுமட்டுமின்றி வரிசையாக இரண்டு படங்கள் நூறு கோடி ரூபாயை வசூலித்ததை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகமும் ஆச்சரியப்பட்டது.

டியூட் பிரதீப் ரங்கநாதன்: இரண்டு படங்களின் மெகா வெற்றிக்கு பிறகு அவர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டியூட் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்திருக்கிறார். சரத்குமாரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் படத்தை தயாரித்திருக்கிறது. கோலிவுட்டில் பிரதீப்பின் மார்க்கெட் உச்சக்கட்டமாக எகிறியிருப்பதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

Pradeep Ranganathan s Dude Twitter Review Movie has started to receive a moderate reception
Photo Credit:

புக்கிங்கில் சூப்பர்: டியூட்டுக்கு போட்டியாக பைசன், டீசல் ஆகிய இரண்டு படங்கள் வருகின்றன. இருப்பினும் பிரதீப் மீது உருவாகியிருக்கும் கிரேஸ் காரணமாக டியூட் மீதுதான் பலரும் கண்களை வைத்திருக்கிறார்கள். அதனால்தான் படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங் ரேஸிலும் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதேசமயம் வெளிநாடு மற்றும் மற்ற மாநிலங்களில் படம் ரிலீஸாகிவிட்டது.

ட்விட்டர் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை ட்விட்டரில் வைக்க தொடங்கியிருக்கிறார்கள். அந்தவகையில் படம் பார்த்த இந்த ரசிகர், 'டியூட் ரொமாண்ட்டிக் காமெடி கதை. முதல் பாதி நன்றாக இருக்கிறது. இரண்டாம் பாதி சுமார்தான்.

முதல் பாதி மெதுவாக ஆரம்பித்தாலும் இடைவேளை காட்சியை நன்றாக வைத்திருக்கிறார்கள். இயக்குநர் கீர்த்திஸ்வரன் ஸ்க்ரீன்ப்ளேவிலும் இரண்டாம் பாதியிலும் தடுமாறியிருக்கிறார். பிரதீப்பும், மமிதாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். சாய் அபயங்கரின் இசை இம்ப்ரெஸ் செய்கிறது. ஒருமுறை பார்க்கலாம். ஐந்து மதிப்பெண்ணுக்கு 2.5 கொடுக்கலாம்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஒருதடவை பார்க்கலாம்: அதேபோல் இன்னொரு ரசிகரும், 'டியூட் படத்தை ஒருமுறை பார்க்கலாம். இரண்டாம் பாதியில் கடைசி 30 நிமிடங்கள் க்ரிஞ்சாக இருக்கிறது. நடிகர்களின் ஃபெர்பார்மென்ஸ் ஓகே. ஐந்துக்கு 2.25 மதிப்பெண் கொடுக்கலாம்' என்று பதிவிட்டிருக்கிறார்.

மேலும் இன்னொருவரும், 'டியூட் படத்தின் இரண்டாம் பாதி சுமாருக்கும் கீழேதான். ப்ளாக்பஸ்டர் ஆகவேண்டிய அத்தனையும் இருந்தாலும் சுமாராகத்தான் முடித்திருக்கிறார்கள்' என தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் ரிஸ்க் எடுத்திருக்கிறார்: படம் ஆரம்பித்த விதம் ஓகே சரத்குமார் என்ட்ரி கொடுத்ட பிறகு ப்ளாக்பஸ்டர்தான். இடைவேளை காட்சி செம ஃபன்னாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் இயக்குநர் ரிஸ்க்கான பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார். தைரியமான முயற்சி. பொதுவான ஆடியன்ஸுக்கு அது கனெக்ட் ஆகுமா என்பது சந்தேகம்தான்' என கூறியிருக்கிறார். படத்துக்கு இப்படி சுமாரான விமர்சனங்கள் வர ஆரம்பித்திருப்பது திரைத்துறையில் ஷாக்கை கொடுத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X